இந்தியாவின் பிரபல வயலின் வித்துவானும் வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தின் சங்கீதப் பேராசிரியருமான வீ. பாலாஜி அவர்கள் இன்று (22) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தார்.
நேற்று நடைபெற்ற அரச இசை விருதுவிழாவில் விசேட விருந்தினராக பேராசிரியர் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டதோடு, அந்த நிகழ்வில் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்தவேளையில் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் வயலின் வாசிப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை தருமாரு கேட்டிருந்தார்.
அதன்படி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு வருகை தருமாறு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இன்று முற்பகல் தமது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு வருகைதந்த பேராசிரியர் பாலாஜி, ஜனாதிபதி அவர்களைச் சந்தித்து உரையாடியதுடன் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் வயலின் வாசித்தார்.
அவரது மகன் அனந்த ராமன் அவர்களும் ஜனாதிபதி முன்னிலையில் வயலின் வாசித்தார்.
கலாசார அலுவலகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி அநுசா கோகுல அவர்களும் இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தார்.