அலவி மௌலானாவின் ஜனாஸா இன்று நல்லடக்கம்
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் இறுதிக் கிரியைகள் இன்று (16) தெஹிவளை மையவாடியில் அஸர் தொழுகையின் பின்னர் (பிற்பகல் 3.30 இற்கு) இடம்பெறும் என அவர்களது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் இறுதிக் கிரியைகள் இன்று (16) தெஹிவளை மையவாடியில் அஸர் தொழுகையின் பின்னர் (பிற்பகல் 3.30 இற்கு) இடம்பெறும் என அவர்களது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
இலங்கைக்கும் முதன்முதலாக அழைப்பு; ஜனாதிபதி இன்று ஜப்பான் பயணம்
G-7 அமைப்பின் 42வது உச்சிமாநாடு நாளை ஜப்பானில் ஆரம்பமாகிறது. நாளையும் மறு தினமும் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கைக்கு முதன் முதலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (மே 25) ஜப்பான் புறப்பட்டுச் செல்கிறார்.
*1,46,000 காணி அலகுகளில் மீள் குடியேற்றம்
*விரைவில் விசேட வர்த்தமானி வெளியீடு
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு பயன்படுத்தப்படாத பெருந்தோட்டக் காணிகளை விசேட வர்த்தமானி மூலம் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அச்சுறுத்தலான பகுதிகளில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு 1,46,000 காணி அலகுகள் தேவைப்படுவதாக காணி இராஜாங்க அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் அமைவுற்றிருக்கும் கண்கவர் எழில் மிகு தீவே இலங்கை. நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் இத்தீவில் உலகிலுள்ள முன்னணி மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பல இனங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக, 130-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்று கூறப்படுகிறது.