13122024Fri
Last update:Wed, 20 Nov 2024

இலங்கையில் இயற்கை சீற்றம்: உயிரிழப்பு 63 ஆக உயர்வு

160518111259 srilanka flood afp 640x360 afp nocreditஇலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக, 130-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்து சில நாட்களாக அடாது பெய்து வரும் பெருமழையால், நாட்டின் அநேக பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மத்திய இலங்கையில் உள்ள மூன்று மலையோர கிராமங்கள் அடர்த்தியான செம்மண்ணால் புதையுண்டுள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். உயிர் பிழைத்திருப்பவர்களை நூற்றுக்கணக்கான படை வீரர்கள் தேடி வந்த போதிலும், மேலும் தொடரும் நிலச்சரிவுகள் அவர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.