13122024Fri
Last update:Wed, 20 Nov 2024

அலவி மௌலானாவின் ஜனாஸா இன்று நல்லடக்கம்

alavi moulana 1முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் இறுதிக் கிரியைகள் இன்று (16) தெஹிவளை மையவாடியில் அஸர் தொழுகையின் பின்னர் (பிற்பகல் 3.30 இற்கு) இடம்பெறும் என அவர்களது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

84 வயதான செய்யத் அஹமத் செய்யத் அலவி மௌலானா, கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்றைய தினம் மரணமடைந்தார்.

5 ஆவது மேல் மாகாண ஆளுநரான இவர், 2002 பெப்ரவரி 01 முதல் 2015 ஜனவரி 23 வரை மேல் மாகாண ஆளுநராக பணி புரிந்தார்.

1932 ஜனவரி 01ஆம் திகதி பிறந்த இவர், 12 மே 2009 முதல் 05 ஜூலை 2009 வரை சப்ரகமுவா மாகாணத்தின் பதில் ஆளுநராக செயற்பட்டார்.

2001 - 2002 காலப் பகுதியில், ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சியில், தொழிலாளர் துறை அமைச்சராக செயற்பட்டிருந்தார்

1948 இல் தொழிற்சங்கவாதியாக அரசியலில் நுழைந்த இவர், 1956 இல் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து அன்றிலிருந்து இன்று வரை ஒரே கட்சியில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.