ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க இருப்பதாக அதன் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர நேற்று(20) தெரிவித்தார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட மஹிந்தானந்த அளுத்கம,குமார வெல்கம,பவித்ரா வன்னியாரச்சி ஆகிய அனைவரையும் மே தினக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்பாட்டுக்குழுவில் ஜனாதிபதி தலைமையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தாலும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களை அழைப்பது எமது கடமையாகும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் சுதந்திரக் கட்சி மீது கொண்டுள்ள பற்றுக் காரணமாக அவர்கள் கட்சியின் மேதினக்கூட்டத்திற்கு வருகை தருவார்கள் என்ற நம்பிக்ைக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்படி கூறினார்.
சுதந்திரக் கட்சி பிளவுபடக் கூடாது என்பதில் ஜனாதிபதியும் கட்சி உறுப்பினர்களும் உறுதியாக உள்ளோம்.இம்முறை சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காலி சமனல விளையாட்டரங்கில் மாபெரும் மே தின ஊர்வலத்தை நடத்தவுள்ளது.
இதில் முன்னொருபோதும் இல்லாத வகையில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவாளர்கள் பங்குபற்ற உள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். எமது மே தினக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக வடக்கு ,கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தோறும் இம்முறை அதிக ஆர்வம் காட்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.ஈமழ மக்கள் ஜனநாயக முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ்,புதிய சிஹலஉருமய,ராஜலிய கட்சி,தேசவிமுக்தி உள்ளிட்ட 11 கட்சிகள் மேதின ஊர்வலத்தில் பங்கெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவும் கலந்துக்ெகாண்டார். மேதினம் தொழிலாளர்களுக்குரியது என்ற போதும் இலங்கை பாரம்பரியம் அடிப்படையில் இதிலிருந்து அரசியலை பிரித்து பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.