எம்.கே.டி. எஸ்ஸின் இறுதிக்கிரியைகள் 24 ஆம் திகதி
மறைந்த காணியமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவின் வெற்றிடத்துக்கு புதிய ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடுதிரும்பியதும் மேற்கொள்ளப்படும் என ஐ.தே.க. பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான சிறுநீரக மாற்று மோசடி குறித்த புதிய விசாரணைகளை சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு அமைச்சு பணிப்புரை விடுத்திருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரம தெரிவித்தார்.
இலங்கை கடற் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் வகையிலான வெளிநாட்டு மீனவர் சட்டத்தை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் மதுபானம் மூலம் வருடாந்தம் அரசாங்கத்துக்கு 120 பில்லியன் ரூபா வருமானமாக கிடைத்த போதும் அதன் சீரழிவுகளிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்கும் செயற்பாடுகளில் பின்னிற்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எல்லை நிர்ணய செயற்பாடுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பூர்த்தி செய்து ஜூன் மாதத்துக்கு முன்னர் உள்ளூ ராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.