16072024Tue
Last update:Wed, 08 May 2024

பிரதி, இராஜhங்க அமைச்சர்கள் 40 பேர் நேற்று பதவிப்பிரமாணம்

Tamil1009 1எட்டாவது பாராளுமன்றத்திற்கான புதிய தேசிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக நேற்று 40 பேர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் மேற்படி உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதுடன் இராஜாங்க அமைச்சர்களாக 19 பேரும் பிரதியமைச்சர்களாக 21 பேரும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். நேற்றுக்காலை இரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் மற்றும் ஒருவர் ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்தும் ஜனாதிபதி முன்னிலையில் சத்திப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய பின்வருவோர் ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக நேற்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன் படி இராஜாங்க, பிரதி அமைச்சர்களாக சிறுபான்மையினர் 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐந்து முஸ்லிம்களும் இரண்டு தமிழர்களும் அடங்குகின்றனர்.

கடந்த ஆட்சியில் கபினட் அமைச்சராக இருந்த ஏ.எச்.எம். பெளசி இம்முறை இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அதேநேரம் பிரதி அமைச்சராக இருந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதியமைச்சர்களாக அமீர் அலி, பைசல் காசிம் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீ. இராதாகிருஸ்ணன் இராஜாங்க அமைச்சராகவும் விஜேகலா மகேஸ்வரன் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சரத் அமுனுகம மற்றும் ஜனக பண்டார, ஆறுமுகன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இம்முறை அமைச்சரவைக்கு நியமிக்கப்படவில்லை. கடந்த தடவை கெபினட் அமைச்சர்களாக இருந்த ஏ.எச்.எம். பெளசி, டிலான் பெரேரா, டி.பி.ஏக்கநாயக்க, பிரியங்கர ஜெயரத்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாகவும் சுமேதா ஜீ. ஜெயசேன பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளது முக்கிய அம்ச மாகும்.

48 கெபினட் அமைச்சர்களையும், 45 ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களையும் நியமிக்க பாராளுமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதுவரை 46 கெபினட் அமைச்சர்களும், 40 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சர்களிடையே முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் இரு பிரதி அமைச்சர்களும் அ.இ.ம.கா. சார்பில் ஒருவரும் நியமனமாகியுள்ளனர்.

இம்முறை நியமிக்கப்பட்ட பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களிடையே கடந்த தேர்தலில் தோல்வியடைந்து ஐ.ம.சு.மு. தேசியப் பட்டியலினூடாக தெரிவான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரும் அடங்குகின்றனர்.