20042025Sun
Last update:Tue, 07 Jan 2025

முன்னாள் DIG, மகன்: சியாமை கொன்ற கொலையாளிகள்

vass gunawardene 1பம்பலபிட்டிய வர்த்தகர் மொஹமட் சியாமை கடத்தி, கொலை செய்த வழக்கில், முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் (DIG) வாஸ் குணவர்தன, அவரது புதல்வர் ரவிந்து குணவர்தனவுடன் மேலும் நான்கு பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 


கொழும்பு உயர் நீதிமன்றத்தின் விசேட உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவினாலேயே இன்று (27) இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பு 802 பக்கங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், இலங்கை வரலாற்றில், DIG ஒருவருக்கு கொலைக் குற்றச்சாட்டு ஒன்றில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.