பாராளுமன்ற கணக்காய்வு தெரிவுக்குழுவான கோப் (COPE-Committee on Public Accounts) கணக்காய்வு தலைவராக மக்கள் விடுதலை முன்னணி எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற கோப் குழுவின் சந்திப்பின்போதே அவர் தெரிவு செய்யப்பட்டார்.
இச்சந்திப்பின்போது, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரை கோப் குழுவின் தலைமை பதவிக்கு முன்மொழிந்ததோடு, மின்சாரம் மற்றும் மீள்புதுப்பிக்கும் சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா அதனை வழிமொழிந்தார்.
அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் தொடர்பிலான கணக்காய்வினை (Audit) பாராளுமன்ற கோப் குழு மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர், இலங்கை கம்யூனிஸ் கட்சியின் தலைவரான முன்னாள் எம்.பி. டியூ குணசேகர, கோப் தெரிவுகுழுவின் தலைவராக இருந்தார்.
இதேவேளை அரச பொது கணக்காய்வு சபையின் (PAC-Public Account Committee) தலைவராக பிரதியமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.