25112024Mon
Last update:Wed, 20 Nov 2024

மஹிந்த அரசு பெற்ற ரூ.8,47,500 கோடி செலுத்த வேண்டிய நிலையில் அரசு

kabir2மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் பெற்ற 8,47,500 கோடி ரூபா கடனை செலுத்தவேண்டிய கடப்பாடு தமது அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார். அரச நிறுவனங்கள் தொடர்பான அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மாத்திரம் ஆயிரத்து 142 பில்லியன் கடனை செலுத்தவேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். ஆட்சிமாற்றத்தின் பின்னர் நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்ட நல்லாட்சி அரசாங்கம் மஹிந்த அரசின் கடனில் 100 பில்லியன் ரூபாவை கடந்த வருடத்தில் மீளச் செலுத்தியது. மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி கொண்டு கடந்த அரசாங்கம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது.

தனது அமைச்சின் கீழ்வரும் ஸ்ரீலங்கன் விமான சேவை 933 பில்லியன் டொலர் நஷ்டத்தில் இயங்குவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்நிறுவனத்தை முன்னாள் ஜனாதிபதியின் மைத்துனர் நிர்வகித்து பஸ் ஒன்றை செயற்படுத்துவது போன்று விமான சேவை யை நடத்தியிருப்பதாகவும் குற்றஞ்சுமத்தினார்.

2008 ஆம் ஆண்டில் எந்த கடனும் இல்லாது இருந்த ஸ்ரீலங்கன் விமான சேவை 2015 ஆம் ஆண்டில் 933 பில்லியன் டொலர் கடன் சுமைக்குள்ளானது . நிறுவனத்தின் சொத்துக்களை விட கடன் சுமை அதிகம். ஸ்ரீலங்கன் விமான சேவையை ஒன்றுக்கும் உதவாத நிறுவனமாக மாற்றி விட்டனர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.