26122024Thu
Last update:Wed, 20 Nov 2024

சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிச் சென்ற படகு மத்திய தரைக் கடலில் விபத்து

* இதுவரை 21 சடலங்கள் மீட்பு ; மீட்புப் பணி தீவிரம்

* இலங்கையர் எவரும் இல்லை

சுமார் 700 குடியேற்றக்காரர்களை ஏற்றி வந்த படகொன்று மத்திய தரைக் கடலில் மூழ்கியதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தெற்கு லிபிய கடற்பகுதியின் இத்தாலி தீவான லெம்படுசா கடற்பகுதியில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு இந்த படகு மூழ்கியதாக இத்தாலி கடலோர பாதுகாப்புப் படையினர் குறிப் பிட்டுள்ளனர். 500 முதல் 700 வரையான புகலிடக் கோரிக்கையாளர்களுடன் வந்த இந்த படகில் இருந்து உயிர்தப்பியவர்களை தேடி பாரிய மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 28 பேர் மீட்கப்பட்டிருப்பதாக நேற்று பின்னேரம் வரை உறுதி செய்யப்பட்டது. முன்னதாக கடந்த வாரம் வடக்கு லிபிய கடற் பகுதியில் தஞ்சக் கோரிக்கை படகு மூழ்கியதில் 400 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆபத்தான அந்த படகில் இருந்து இன்னுமொரு சரக்கு கப்பலுக்கு ஏறுவதற் காக அனைவரும் முண்டியடித்துக்கொண்டு படகின் ஒரு புறத்துக்கு நகரந்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் கூறுகின்றன. லெம்படுசா தீவில் இருந்து 130 மைல் தொலைவு மற்றும் லிபிய கடற்கரையில் இருந்து 17 மைல் தொலைவில் இத்தாலி கப்பல்கள், மோல்டா கடற்படை மற்றும் வர்த்தக கப்பல்கள் மீட்பு நடவடிக்கையில் பங்கேற்றுள்ளன.

தற்போது வரை உயிர்களை பாதுகாப் பதற்கான மீட்பு நடவடிக் கைகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட இத்தாலி கடலோர பாதுகாப்பு படை பேச்சாளர், காலம் தாமதிக்கும் போதும் சடலங்களை தேடும் நடவடிக் கையே சாத்தியமாக இருக்கும் என்றார்.

இரு கப்பல்கள் மற்றும் மூன்று ஹெலிகொப்டர்கள் விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் குறிப்பிட் டுள்ளன. நீரில் சடலங்கள் மிதந்து கொண்டிருக்கும் வேளையில் உயிர் தப்பியவர்களை தேடும் மீட்பு நடவடிக்கையே முன்னெடுக்கப் பட்டிருப்பதாக மோல்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் குறிப் பிட்டார்.

இந்த படகு விபத்தின் உயிர்ப்பலி உறுதி செய்யப்படும் பட்சத்தில் மத்திய தரைக் கடலில் அண்மை வரலாற்றில் இடம் பெற்ற மிக மோசமான குடியேற்ற படகு விபத்தாக இது அமையும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 21 சடலங்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக இத்தாலி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பாவில் தஞ்சம் கோரி ஆண்டுதோறும் ஆயிரக் கணக்கான மக்கள் மத்திய தரைக் கடலில் ஆபத்தான படகு பயணத்தில் ஈடுபடு கின்றனர்.