தலைவர் அவர்களே,
செயலாளர் நாயகம் அவர்களே,
தூதுக் குழுவினரே,
அம்மணிகளே, கனவான்களே,
ஐக்கிய நாடுகளின் ஒரு நீண்டகால உறுப்பினராகவிருக்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட சனாதிபதி என்ற வகையில் ஐக்கிய நாடுகளின் வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவது எனக்கு உண்மையிலேயே ஒரு கௌரவமாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் உள்ளது.
மேதகு மொகென்ஸ்லிக்கெட்டொப்ட் அவர்களே, பொதுச்சபையின் 70வது கூட்டத்தொடரின் தலைவராக நீங்கள் தெரிவுசெய்யப்பட்டமையையிட்டு இலங்கை அரசாங்கத்தினதும், மக்களதும் சார்பாக நான் தெரிவிக்கும் எனது உளமார்ந்த பாராட்டுதல்களை தயவூசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். 69 வது பொது சபை கூட்டத்தொடரின் சாதனைகளுக்கு அளப்பரிய பங்களிப்பாற்றிய முன்னாள் தலைவர் மேதகு சாம் குடேசா அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு தற்போது எழுபது வருட சிறப்பான சாதனை வரலாறு ஒன்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் உள்ள நாம் உலக சமாதானம்இ பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பொறுப்புமிக்கதும்இ சவால் நிறைந்ததுமான பணியில் கடந்த எழுபது ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கிறௌம். எனினும்இ அத்தகைய சவால்கள் இன்னும் எம்முன்னே உள்ளன என்பதை நான் உணர்கின்றேன்.
ஐக்கிய நாடுகளின் முதலாவது செயலாளர் நாயகமான திரு. ட்ரிக்வே லீ 1953 ஆம் ஆண்டு கொரிய நெருக்கடி உச்சநிலையில் இருந்தபோது பதவியிலிருந்து விலகிச்செல்கையில் செயலாளர் நாயகம் பதவிகுறித்து இவ்வாறு விபரித்தார். “உலகில் மிகவூம் அசாத்தியமான பணி”. ஐக்கிய நாடுகளின் உலகளாவியத் தன்மையை மேம்படுத்துவதிலும்இ எதிர்காலத்தில் மனித குலத்திற்குச் சிறப்பாகச் சேவையாற்றக்கூடிய ஒரு நிறுவனமாக அதனை ஆக்குவதிலும் இப்பதவி வகித்த அனைத்து செயலாளர் நாயகங்களும் பெருமளவூ பங்களிப்புச் செய்துள்ளனர் என்பது யாரும் அறியாததொன்றல்ல.
தற்போதைய செயலாளர் நாயகம் மேதகு பான்கீ மூன் அவர்களும் இந்நிறுவனத்திற்கு உன்னதமான பங்களிப்பொன்றை ஆற்றியூள்ளார். செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களேஇ நீங்கள் ஆற்றியூள்ள சேவைக்காக என்னுடையதும்இ எனது மக்களதும் கௌரவமான நன்றிகளைத் தயவூசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள்.
தலைவர் அவர்களே,
இலங்கை அறுபது ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஓர் உறுப்பினராக இருந்துவருகிறது. ஓர் உறுப்பு நாடு என்றவகையில் நாங்கள் இந்நிறுவனத்தில் மிகவூம் முனைப்பானதும்இ பொறுப்புமிக்கதுமான பங்கொன்றை ஆற்றியூள்ளோம்.
இலங்கை ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சமவாயங்கள்இ உடன்படிக்கைகள் ஆகியவற்றின் நோக்கங்களையூம்இ கோட்பாடுகளையூம் மதிக்கும் ஒரு நாடாகும். ஐ.நா.வின் ஒரு பிரதான குறிக்கோள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும்இ மேம்படுத்துவதுமாகும். இலங்கை இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் பற்றுறுதி ப+ண்டுள்ளது. இந்தவிடயத்தில் மனித உரிமைகளை மேம்படுத்துமுகமாக இலங்கையில் புதியதொரு நிகழ்ச்சித்திட்டத்தையூம்இ வேலைத்திட்டத்தையூம் அமுல்படுத்த நாம் சித்தம் கொண்டுள்ளோம்.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை பல்-அம்ச வகிபாகமொன்றை ஆற்றுகின்றது. 1960 களில் ஆரம்பித்த ஐ.நா அமைதிகாக்கும் பணிக்கான எமது பங்களிப்பு இன்னும் தொடர்கிறது. எதிர்காலத்தில் ஐ.நா.அமைதிகாக்கும் பணிக்காக எமது பங்களிப்பை மேலும் அதிகரிப்பதற்கு இலங்கை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறது.
தலைவர் அவர்களே,
நீதிஇ சுதந்திரம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை கொண்டுவந்த புதிய ஜனநாயக யூகம் ஒன்று 2015 ஜனவரி 08 ஆம் திகதி இலங்கையில் உதயமானது. எமது சமூக மற்றும் மானுட அபிவிருத்தி அணுகுமுறை பன்மைத்துவம்இ நல்லிணக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. அடுத்த ஐந்து வருடங்களுக்கான எனது அரசாங்கத்தின் அபிவிருத்தித் தொலைநோக்கும் அதே அடிப்படையில் அமைந்துள்ளது.
எனவே இந்தக் கூட்டத்தொடரின் தொனிப்பொருள் – “ஐ.நா வின் எழுபது ஆண்டுகள்: சமாதானம்இ பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கான முன்னோக்கிய பாதை” எனது அரசாங்கத்தின் தொலைநோக்குடன் பெரிதும் ஒத்துப்போவதாக அமைந்துள்ளது. மேலும்இ சமாதானம் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை ஆகியவற்றை மேலும் உறுதிப்படுத்துவதற்கு இலங்கை ஒரு முன்னேற்பாட்டு மற்றும் நடைமுறைச்சாத்திய நிகழ்ச்சித்திட்டமொன்றை விருத்திசெய்வதில் எனது அரசாங்கம் பற்றுறுதி ப+ண்டுள்ளது.
தலைவர் அவர்களே,
இலங்கை மக்கள் கடந்த எட்டு மாதங்களில் ஒரு புதிய ஜனாதிபதியையூம் ஒரு புதிய அரசாங்கத்தையூம் அடுத்தடுத்த இரண்டு தேர்தல்களில் தெரிவூசெய்தனர். முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துமுகமாக எனது அரசாங்கம் அரசியலமைப்பிற்கு முக்கிய திருத்தங்களை அறிமுகஞ்செய்தது. இத்திருத்தங்கள் பன்மைத்துவத்தையூம்இ ஜனநாயகத்தையூம் வலுப்பெறச்செய்த நிறுவன மறுசீரமைப்புகளினுhடாக நல்லாட்சியின் அடித்தளத்தைப் பலப்படுத்தின. எனது தனிப்பட்ட தலையீட்டினாலும், வசதியேற்படுத்தலினாலும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரங்களுள் சில பாராளுமன்றத்திற்கும், வேறு சுயாதீன நிறுவனங்களுக்கும் மாற்றப்பட்டன.
இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலைத்தொடர்ந்து, நாட்டில் ஆறு தசாப்தங்களாக நிலவிய முரண்பாட்டு அரசியல் கலாசாரத்தை மாற்றி, இணக்கப்பாட்டு ஆட்சிக்கான ஒரு கூட்டணியை ஏற்படுத்துமுகமாக நாட்டிலுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்க என்னால் முடிந்தது.
நாட்டிற்கான எமது புதிய தொலைநோக்கானதுஇ நிலைபேறான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் எனும் இரட்டைக் குறி-க்கோளை அடைவதை உள்ளடக்கியுள்ளது. இதற்கான ஓர் அடிப்படைத் தேவை நேர்மையாக கடந்தகாலத்தைக் கையாள்வதும்இ நவீன இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதுமாகும்.
கடந்தகாலத்தை கையாள்வதில்இ உண்மையைத்தேடுதல், நீதி, (காயங்களை) ஈடுசெய்தல் மற்றும் மீண்டும் நிகழாதிருத்தல் என்ற நடைமுறையொன்றை நாங்கள் பின்பற்றுவோம்.
21 ஆம் நுhற்றாண்டின் சவால்களை எதிர்த்துநிற்பதற்கு இலங்கை புதிய சமூகஇ பொருளாதார மற்றும் அரசியல் அணுகுமுறையொன்றைக் கடைப்பிடிப்பது அவசியமாகும். இந்த விடயத்தில் நல்லிணக்கத்திற்கு எமது நாட்டில் முன்னுரிமைக் கவனம் செலுத்தப்படும். எனது தலைமையிலான புதிய கருத்தொருமை அரசாங்கமானது இந்த இலக்குகள் அடையப்பெறுவதை துரிதப்படுத்தத்தேவையான அரசியலமைப்பு மற்றும் நிறுவன சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவூம், நடைமுறைப்படுத்தவும் பல நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது.
தலைவர் அவர்களே,
இலங்கை மோதல் முரண்பாடுகளால் வேதனையூற்ற ஒரு தேசமாகும். முரண்பாடுகள் ஒரு தேசத்துக்கு அழிவை ஏற்படுத்தும் அதேவேளையில் ஒரு முரண்பாட்டின்போதும், அதன்பின்னரும் கற்றுக்கொள்ளப்படவேண்டிய பல பாடங்கள் உள்ளன.
சகல வடிவங்களிலுமான யூத்தங்களும், பயங்கரவாதமும் மனிதகுலத்துக்கு ஓர் அவமானமாகும். மனித உரிமைகளுக்கான அகிலப் பிரகடனத்தின் பூர்வாங்க வாசகம் இக்கலகங்கள் வெடித்தெழும் முறைகுறித்துப் பேசுகின்றது. மூலகாரணம் எதுவாகவிருப்பினும்இ இந்தச் சகாப்தத்தின் சவால் இத்தகைய மனிதகுலத்துக்கெதிரான கொடூரங்களைத் தோற்கடிப்பதற்கான வழிவகைகளைத்தேடுவதாகும். மனக்குறைகளைத்தீர்ப்பதற்குப் பயங்கரவாதத்தை நாடுவதும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கையெடுப்பதும் பிரச்சினைகளை உருவாக்கலாம். இலங்கை பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் வெற்றிகண்டது. ஆயினும்இ அது இன்னமும் ஆசியாவிலிருந்து ஆபிரிக்கா வரையூம், லத்தீன் அமெரிக்கா வரையூம் அபிவிருத்தியூறும் நாடுகளை மூச்சுத்திணறவைக்கின்றது.
நாம் உலகின் மிகவூம் இரக்கமற்ற ஒரு பயங்கரவாதத்தை தோற்கடித்தோம். அதேபோன்றுஇ யூத்தத்துக்குப்;பின்னரான எமது அனுபவங்களும் முக்கியமானவையாகும். இந்த அனுபவங்கள் அனைத்தையூம் ஏனைய பயங்கரவாத்தால் பாதிப்புறும்இ அபிவிருத்தியூறும் நாடுகளுடன் பயனுள்ளவகையில் பகிர்ந்துகொள்ளலாமென்றும் நாம் நம்புகின்றௌம். இந்த நாடுகளுடன் மேலும் துடிப்பான ஓர் உரையாடலில் ஈடுபடுவதற்கும்இ தொடர்ந்தும் பயங்கரவாதத்துக்கெதிராகப் பேசிஇ பரப்புரைசெய்வதற்கு இலங்கை தயாராகவூள்ளது.
தலைவர் அவர்களே,
இந்தச் சூழமைவிலேயே நான் இந்த அமர்வின் தொனிப்பொருளைக் கையாள விரும்புகின்றேன்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு 20 ஆம் நுhற்றாண்டில் நிகழ்ந்த மனிதகுலத்துக்கு அவமானகரமான அவலங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுக்கும் குறிக்கோளுடன் தாபிக்கப்பட்டதாகும். இந்த வருடத்துக்கான கருப்பொருள், “சமாதானம்இ பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள்” என்பதாகும். இக்கருப்பொருள் கடந்த ஏழு தசாப்தகாலமாக நாம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆரம்பகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்வகையில் செயற்பட்டுள்ளோமா என்பதை மீளாய்வூசெய்வதற்கு எமக்கு ஊக்க ஆர்வத்தை வழங்குகின்றது.
தலைவர் அவர்களே,
உலகளாவிய அபிவிருத்திக்கு வடக்குக்கும், தெற்குக்குமிடையில் இடம்பெறுவதுபோலவே தெற்கிலுள்ள நாடுகள் மத்தியிலும் உரையாடல் இடம்பெறுவது முக்கியமானதென்று நான் எண்ணுகின்றேன். தெற்கைப் பிரதிநிதித்துவம்செய்யூம் எமது நாடு இத்தகைய தெற்கு-தெற்கு உரையாடல்களை ஊட்டிவளர்க்கும் விடயத்தில் பெருமளவிலான பங்கை ஆற்றமுடியூம்.
தலைவர் அவர்களே,
இலங்கை தென்னாசியப் பிராந்தியத்தில் மிகவும் பழைமை வாய்ந்த பிரதிநிதித்துவ ஜனநாயகங்களுள் முன்னணியில் திகழும் ஒரு நாடாகும். நீண்டகால மோதல்கள் இடம்பெற்றவேளையிலும்இ நாம் எமது நாட்டில் அதிருஷ்டவசமாக ஜனநாயக ஒழுக்கப்பண்புகளைப் பேணிப்பாதுகாத்துள்ளோம். ஓர் உயர்வான பொருளாதார வளர்ச்சி வீதத்தை பேணுவதற்கு எதிரான பல காரணிகள் இருந்தபோதிலும்இ நாம் சுதந்திரம்பெற்ற காலத்திலிருந்து நிலவிவரும் அரச சமூக நலனோம்புகைக் கொள்கைகளை நிலைபேறாக வைத்திருப்பதில் வெற்றிகண்டோம். அனைவருக்கும் இலவசக்கல்விஇ இலவச சுகாதாரக்கவனப்பராமரிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்டவகையிலான இக்கொள்கைகளில் நாம் என்றுமே விட்டுக்கொடுப்புகளைச் செய்ததில்லை. சமூக ஜனநாயக வழியொன்றைப்பின்பற்றிஇ இலங்கை மோதல் வருடங்களின்போதும் மனித அபிவிருத்திக்காட்டியில் உயர்ந்த மட்டங்களை ஈட்டிக்கொள்வதில் வெற்றிகண்டுள்ளது. இந்த வெற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பின் சகத்திர அபிவிருத்திக்குறியிலக்குகளை ஈட்டிக்கொள்வதற்கான எமது அர்ப்பணவூணர்வூக்கான ஒரு சான்றுரையாகும்.
தலைவர் அவர்களே,
அபிவிருத்தியென்பது பெண்களுக்கும், இளைஞர் யுவதிகளுக்கும் அதிகார வலுவூட்டி, சிறுவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிசெய்தல் வேண்டும். இளைஞர் மத்தியிலான விரக்தியுணர்வு வழக்கமாக மோதலுக்கு இட்டுச்செல்லக்கூடியதாகும். எவ்வாறாயினும், நிலைபேறான அபிவிருத்தியின் இயக்கசக்தி இளைஞர்களேயாவர். ஆகவே, நாம் 21 ஆம் நுhற்றாண்டின் அறிவு அடிப்படையிலான உலகத்தில் வெற்றிகாண்பதற்கு இளைஞர்களைப் ப+ரணமான திறன்படைத்த உழைப்பாளர் அணியாக நிலைமாற்றம் செய்தல் வேண்டும். இது 2015 க்குப் பின்னரான நிலைபேறான அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் ஒரு முன்னிலை ஆக்கக்கூறாகவிருத்தல் வேண்டும்.
இவ்வாறே நாம் பெண்களுக்கும் அதிகார வலுவூட்டும்வகையிலும், அதன் மூலம் அபிவிருத்தியில் அவர்களின் பங்களிப்பை மேம்படுத்தும்வகையிலும் ஒரு தேசீய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்தல் வேண்டும். வினைத்திறனும், கருணையும் கொண்ட ஒரு சமுதாயத்தை அபிவிருத்திசெய்வதற்கு சிறுவர்களையூம், அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டங்களும் இன்றியமையாத காரணிகளாகும்.
நிலைபேறான அபிவிருத்திசம்பந்தமான எனது விளக்கம் துறைசார்ந்த அல்லது குழுரீதியிலான தனிவேறாக நிகழும் அபிவிருத்தியல்ல. மாறாக, அது அனைவரையும் உள்ளடக்கும்வகையிலான, அகிலரீதியில் அபிவிருத்தியை மேம்படுத்தும் ஆற்றல்கொண்ட ஓர் அபிவிருத்தி மாதிரியாக அமைதல் வேண்டும். இந்த நோக்கத்துக்காக நான் ஒரு புதிய உலகரீதியான அணுகுமுறைக்கான தேவையை வலியுறுத்துகின்றேன்.
தலைவர் அவர்களே,
நாம் இலங்கையில் நிலவிவரும் பௌத்த ஒழுக்கநிலைப்பண்பிலிருந்து கற்றுக் கொள்வதுபோன்றுஇ மூன்றுவகையிலான மனித மோதல் முரண்பாடுகள் நிலவூவதை நான் காணுகின்றேன்.
முதலாவதுஇ மனிதனுக்கும்இ இயற்கைக்குமிடையிலான முரண்பாடாகும். நாம் வாழ்க்கையில் பொருளாதார வசதிகளை அனுபவிப்பதற்காக இந்த முரண்பாட்டில் நிலையாக ஈடுபட்டுள்ளோம். இதன்விளைவாகஇ நவீனயூகத்து மனிதர்கள் அபிவிருத்தியென்ற பெயரில் இயற்கை மூலவளங்களை விஸ்தாரமாகச் சுரண்டத் தள்ளப்படுகின்றனர்.
இரண்டாவது, மனிதர்களுக்கிடையில் நிலவூம் முரண்பாடாகும். இவை தனிமனிதர்களுக்கிடையிலும்இ ஜனசமூகங்களுக்கிடையிலும்இ தேசங்கள் மத்தியிலும் இடம்பெறுகின்றன. மனித உரிமைகள் அகிலப் பிரகடனம் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சியினால் பாதுகாக்கப்படாதவேளைகளில் இத்தகைய முரண்பாடுகள் எழுவதாக உறுதிபடத்தெரிவிக்கின்றது.
மூன்றாவதுஇ மனிதப்பிறவியினுள் இருக்கும் முரண்பாடாகும். நான் முதலில் குறிப்பிட்ட இரு வகையான முரண்பாடுகளும்இ நாம் மனிதப்பிறவிகளென்றவகையில் எம்முள் நிகழும் போராட்டத்தில் தோல்வியூறும்போது எழுபவையாகும். ஆகவேஇ இதுவே சகல மோதல் முரண்பாடுகளினதும் பிரதான காரணமாகும்.
தலைவர் அவர்களே,
தீவிரவாதம்இ மிதமிஞ்சிய நுகர்வூஇ சூழலைத் தன்னிச்சையாகச் சுரண்டுதல்இ மனித உரிமை மீறல்கள்இ வருமானத்தில் மோசமான ஏற்றத்தாழ்வூகள் என்பவை அனைத்துமே எம் ஆசைகளை அடக்குவதற்கான எமது ஆற்றலின்மையின் விளைவேயாகும். ஏனைய பிரச்சினைகளோடுஇ அவை பாதுகாப்பின்மை உணர்வு, முரண்பாடு, உரிமை மீறல்கள் மற்றும் சுரண்டல் என்பவற்றையும் உருவாக்குகின்றன.
ஆகவேஇ நிலைபேறான அபிவிருத்தியின் அதியூன்னத சாதனை சுய-ஒழுக்கம் மற்றும் ஒப்புரவு என்பவற்றின்மீது கட்டியெழுப்பப்படுதல் வேண்டும். இதை நாம் தனிநபர்இ ஜனசமூகஇ தேசீய மற்றும் அனைத்துலக மட்டங்களில் நடைமுறைப்படுத்தமுடியூமாயின்இ அது மனிதவர்க்கத்துக்கான ஒரு மகத்தான முன்னேற்றப்பாய்ச்சலைக் குறிப்பதாக அமையும்.
தேசியத் தலைவர்களென்றவகையில், நாம் இந்தச் சுய-ஒழுக்கநிலையை நன்கறிந்;துகொண்டு, எதிர்காலத்துக்கான இயைபுள்ள செயல் திட்டங்களை வகுக்கும்போது ஒப்புரவு அடிப்படையிலான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டுமென்று நான் முன்மொழிகின்றேன்
இறுதியாக, என் தாய்நாட்டின் அன்புக்குரிய மக்களை அறிவுள்ள ஒரு மகத்தான தேசமாக முன்னேற்றுவதற்கும், உலகின் முழு மனிதகுலத்துக்கும் விமோசனத்தைக் கொண்டுவருவதற்கும் அர்ப்பணிப்புணர்வுடன் நாம் பிரயத்தனங்களை மேற்கொள்வோம்.
உயரிய மும்மணிகளின் ஆசிகள் உங்கள் அனைவருக்கும் கிட்டுவதாகுக!