26122024Thu
Last update:Wed, 20 Nov 2024

சட்டவிரோத வீடுகள் உள்ளிட்ட 36 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூபா 10 ஆயிரம்

rs 10000 for flood effectedகொலன்னாவ, வெல்லம்பிட்டிய  பிரதேச செயலாளா் பிரிவில் 36 ஆயிரம் குடும்பங்கள் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இம் மக்கள் தமது சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் வீட்டின் ஆரம்ப செலவுகளுக்காக முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ருபா 10ஆயிரம் பகிா்ந்தளிக்கப்பட்டன.

நேற்று (18) கொலன்னாவையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிஙக, நிதி அமைச்சா் ரவி கருணாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டதோடு,  இந்நிகழ்வு பராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்காா் தலைமையில் நடைபெற்றது. 

இங்கு கருத்து தெரிவித்த மரிக்காா்.

இப்பிரதேசத்தில் வீட்டுரிமையாளா்கள், வாடகை வீட்டில் இருந்தவா்கள், சட்டவிரோத வீடுகளில் வாழ்ந்த சகலருக்கும் அரசாங்கத்தினால் முதற்கட்டமாக 10ஆயிரம் ருபா வழங்கப்படுகின்றது.  

இதனை பிரதமர், ஜனாதிபதி அவா்களின் அனுமதியின் பேரில் ஒவ்வொரு கிராம சேவகர் ஊடாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 36 ஆயிரம் குடும்பங்களுக்கு 10ஆயிரம் ருபா வழங்க தீர்மானிக்கபப்ட்டுள்ளது.  

இது தவிர, கடந்த 10 நாட்களுக்குள் இப்பிரதேசத்தில், 800 தொன் குப்பைகள் அகற்றப்பட்டன. ஒவ்வொரு வீட்டுக்கும் 2 உழவு இயந்திரம் வீதம் அவை அகற்றப்பட்டன. 

அத்துடன் எனது நிதியில்  பாடசாலை மாணவா்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் சப்பாத்துகள் வழங்கப்பட்டன.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களது சுயதொழில் முயற்சிக்காக உதவித் திட்டம் அடுத்த கட்டம் வழங்கப்படும். அதற்காக, நிதி அமைச்சினால் உரிய நிதிகளை விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளாா். 

சகல உடைமைகளும் வெள்ளத்தினால் எடுத்துச் செல்லப்பட்டு நாசமாகியுள்ள நிலையில், மீள குடியேறி வாழ்ந்து வரும் மக்கள் அன்றாடம் தமது செலவினங்களை சமாளிக்க பாரிய இன்னல்களை எதிா்நோக்கி வருகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் மரிக்காா் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தாா்.