கே. அசோக்குமார்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 32 பேர் தீபாவளி தினத்தன்றுக்கு முதல் நாள் 9 ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
எல். ரி. ரி. ஈ. சந்தேக நபர்களாக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக் கோரி கைதிகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாகவும் இப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் எனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோச னைக்கமைய ஆராயப்பட்டது. நீதி அமைச்சு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்தன.
இதன் இறுதிக் கட்ட மாகவே பயங்கர வாத தடைச்ச ட்டத்தின் கீழ் நீண்டகாலம் தடு த்து வைக்கப்பட்டுள்ளவர்கள் 32 பேரை முதற்கட்டமாக 9 ஆம் திகதி விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என நீதி அமைச்சு தெரிவிக்கிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பாராளுமன்றத்தில் விசேட பேச்சுவார்த்தையின் பின்னர் முடிவு செய்யப்பட்டதாக நீதி அமைச்சு அறிவித் துள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் 9 ஆம் திகதி முதல் ஆரம் பிக்கப்படவுள்ளதுடன் இரண்டாவது கட்டமாக நவம்பர் 20 ஆம் திகதி 30 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். எஞ்சி யுள்ள கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் விசேட குழுவொன்று நிய மிக்கப்படவுள்ளது என நீதி அமைச்சும் சட்டமும் ஒழுங்கும், சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சும் தெரிவிக்கின்றன.