நோர்வூட், பகுதிகளில் பா¡ய மண்சரிவு
* இடி, மின்னல் தாக்கம் அதிகரிக்கும்
* தாழ்ந்த பகுதிகளில் வெள்ள அபாயம்
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பிரதேசங்களில் மண் சரிவும், ஏனைய தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலையும் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று மாலையில் அறிவித்தது.
தற்போது இடைப்பருவப் பெயர்ச்சிக் காலநிலை நிலவுவதால் இடிமின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்வதில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் சிறிமால் ஹேரத் கூறினார். இடி மின்னல் அதிகமாகக் காணப்படும் போது காற்றின் வேகம் திடீரென அதிகரிக்கும்.
அதனால் கடற்றொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது, நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவுப்படி நாட்டில் அதிகூடிய மழை மொனறா கலையில் 108.6 மி. மீற்றர்களாகப் பதிவாகியுள்ளது. என்றாலும் இம் மழைக் காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும்.
அதன் காரணத்தினால் இடி மின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்வது மிகவும் அவசியமானது. இவ்வருடத்தில் இதுவரையும் 22 பேர் இடி மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களில் இருவர் கடந்த வாரம் புத்தளவில் உயிரிழந்தவர்களாவர்.
மண்சரிவு முன்னெச்சரிக்கை
இதேவேளை மண்சரிவு அபாயம் மிக்க பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்யுமாயின் மண்சரிவுகள் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு 24 மணி நேர மண்சரிவு முன்னெச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் நேற்று விடுத்தது.
கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மாத்தளை, ஹம்பாந்தோட்டை ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்குமே இம் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டி ருக்கின்றது.
இம்மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் மிக்க பிரதேசங்களில் வாழ் பவர்கள் மிகவும் விழிப்பாக இருக்கு மாறும் அந்நிறுவனம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நுவரெலியாவில் பாதிப்பு
காசல் ரீ நீர்த் தேக்கத்திற்கு அருகி லுள்ள ரொக்வூட் தோட்டத்தில் நேற்று முன்தினம் மண்சரிவொன்று ஏற்பட்டது. இதனால் எவருக்கும் பாதிப்பு நேரா விட்டாலும் தோட்டத்திற்கு செல்லும் வீதி மணலில் மூடுண்டுள்ளது. இதனால் தோட்டத்திற்கான வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இருபது குடும்பங்கள் குடியிருப்பதால் மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
இதேவேளை ஹட்டன் சமனல கம பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்று முன்தினம் மாலையில் மணல் மேடொன்று விழுந்துள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதேவேளை இப்பகுதியில் வசிக்கும் 15 குடும்பங்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பதுளையில்
பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குறிப்பிடுகையில், அடிக்கடி மழை பெய்து வருவதால் மண் சரிவு மிக்க பிரதேசங்களில் வாழ்பவர்களை விழிப்பாக இருக்குமாறு அறிவூட்டியுள்ளோம்.
கோணகலை தோட்டத்தில் வசிக்கும் பதினொரு குடும்பங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது இக்குடும்பங்களை இரவில் அருகிலுள்ள ஆஸ்பத்திரி கட்டடத்தில் தங்கி இருக்கு மாறும் அறிவுரை வழங்கியுள்ளோம்.
இதேவேளை எல்ல - பஸ்ஸர வீதியி லுள்ள 21 கட்டைகளுக்கு அருகில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியோடு மண் அப்புறப்படுத்தப்பட்டு வீதிப் போக்கு வரத்து சீரமைக்கப்பட்டது என்று கூறினார்.
மொனராகலையில் பாதிப்பு
மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர் ரவீந்திர குமார குறிப்பிடுகையில், மொனராகலை மாவட்டத்தில் அதிக மழை பெய்ததால் வெள்ளவாய பிரதேசத்தில் சிறு வெள்ள நிலை ஏற்பட்டதுடன் நான்கு குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு கும்புகன் மற்றும் ஒக்கம் பிட்டிய வீதியிலுள்ள மூன்றாம் கட்டையில் பாரிய மரமொன்று நேற்று முன்தினமிரவு முறிந்து விழுந்தது.
இதனால் இவ் வீதியூடான போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இராணுவத்தி னரதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்புடன் மரக் கூட்டத்தாபன ஊழியர்களால் இம் மரம் வெட்டி அப்புறப்படுத்தப் பட்டது என்றும் குறிப்பிட்டார்.