23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

வரவு செலவுத் திட்டம் 2016 (Live)

ravi karunanayake04.30 PM - வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் வரிகளிலிருந்து விடுவிக்க முன்மொழிவு.

 04.25 PM - கிராமிய வீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்கும் யோசனை.

 
04.24 PM - 5 ஆண்டுகளில் ஒரு இலட்சம் வீடுகள் கட்டப்படும்.
 
04.24 PM - பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்டும்
 
04.05 - இலங்கையின் அனைத்து வங்கியின் மூலமும் இலத்திரனியல் முறையிலான கொடுக்கல் வாங்கல் வசதி.
 
04.04 - ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை (Dgital NIC) அறிமுகப்படுத்த நடவடிக்கை.
 
04.02 PM - தங்க கைத்தொழில் : தங்கம் மீது விதிக்கப்பட்டுள்ள வரி ஏற்புடையதல்ல. அதன்படி, இறக்குமதி வரிக்கு மேலதிகமாக, தங்க இறக்குமதிக்கான 50 அனுமதிப்பத்திரத்தை இலங்கை மத்திய வங்கியின் மூலம் வழங்க முன்மொழிகிறேன். இந்த  அனுமதிப்பத்திரம் இன்றி எந்தவொரு தங்க  வர்த்தகத்திற்கும் அனுமதி இல்லை.
 
04.01 PM - அனைத்து அரசாங்க கட்டடங்களிலும் தொழில்நுட்பத்தை இணைக்க பரிந்துரை.
 
03.58 PM- வவுனியாவில் புதிய பொருளாதார வலயம்
 
03.58 PM - அலங்கார மீன் கைத்தொழில்: அழகு மீன் கைத்தொழிலை ஆரம்பிப்போருக்கு கடன் வழங்க முன்மொழிவு
 
03.58 PM - நிகர நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறைப்படுத்த அதிகாரசபை: அனைத்து நிதி நிறுவனங்களின் அதிகாரசபையில் வருடாந்த கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்படு வேண்டும்.
 
03.57 PM - மாணிக்கம் மற்றும் ஆபரண கைத்தொழிலை விருத்தி செய்ய, பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி பெறுவோருக்கு நவீன பயிற்சிநெறிகள் வழங்கப்பம்.
 
03.55 PM - சிறிய குளங்கள், கால்வாய்களை புனரமைக்க ரூபா 2,000 மில்லியன்.
 
03.55 PM - தெங்கு கைத்தொழில்: தெங்கு உற்பத்தி திட்டத்திற்கு ரூபா 250 மில்லியன் ஒதுக்க முன்மொழிவு.
 
03.54 PM - விவசாயம் தொழின் முயற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
 
03.52 PM - பாக்கு சேகரிக்கும் வலயங்கள் உருவாக்க முன்மொழிவு.

03.51 PM - தேயிலை உற்பத்தியை உயர்த்த தேயிலை இறக்குமதி விதிகள் தளர்த்தப்படும்.

03.47 PM - பெருந்தோட்ட கைத்தொழிலை அபிவிருத்தி செய்ய பிரதேச அளவிலான தோட்ட நிறுவனங்களை பங்கு சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்
 
03.45 PM - தேசிய மீன் உற்பத்தியை அதிகரிக்க துறைமுகங்களுக்கு நவீன தொழில்நுட்பத்தை இணைக்க முன்மொழிவு 
 
03.44 PM - மீனவர்களுக்கு ரூபா ஒரு மில்லியன் காப்பீட்டுத் திட்டம்
 
03.42 PM - தேசிய பால் உற்பத்தியை உயர்த்தும் பொருட்டு 400g உள்நாட்டு பால்மாவின் விலையை ரூபா 320 இலிருந்து ரூபா 295 ஆக குறைப்பதற்கு நான் முன்மொழிவு
 
03.40 PM - பழம் பதப்படுத்தி தகரத்தில் அடைக்கும் தொழிலை மேம்படுத்த 50 % வட்டி கொண்ட கடன்
 
03.39 PM - சிறு விவசாயிகளுக்கு மாத்திரமே, உர மானியம் வழங்கப்படும்.
 
03.38 PM சம்பா கிலோ ஒன்றுக்கு ரூபா. 41 கீரி சம்பா ரூபாய் 50
 
03.35 PM - நெல்லுக்கு உத்தரவாத விலை

03.35 PM - சிறிய மற்றும் மத்திய தர வணிக முயற்சியாளர்களுக்கான மூலதனத் திட்டத்திற்கு காப்பீட்டு திட்டம், ஊழியர் சேமலாப நிதிய திட்டம், வெளிநாட்டு முதலீடுகள் மூலம் தொழிலை நடாத்திச் செல்வதற்கான மூலதனம் வழங்கப்படும்.

03.33 PM - இறக்குமதி  செய்யப்படும்விவசாய இயந்திரங்களுக்கு வரி விலக்கு

03.31 PM - புதிய விவசாயக் கொள்கை

03.27 PM - சிறிய மற்றும் நடுத்தர வியாபார முயற்சியாளர்களுக்கு கடன் வழங்க ரூபா 500 மில்லியன் ஒதுக்கப்படும்

03.26 PM - சிறிய மற்றும் நடுத்தர வியாபார முயற்சியாளர்களுக்கு கடன் திட்டம்

03.17 PM - தனியார் ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்

03.16 PM - போக்குவரத்து நெரசல் காணப்படும் நகரங்களில் உயர் தரமான போக்குவரத்து முறைமை

03.15 PM - சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரிபொருள் பாவனைக்கு நடவடிக்கை.

03.04 PM - பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை.

03.15 PM - வீதி புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

03.10 PM - டெங்கு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

02.53 PM - மஹிந்த ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் நாம் நல்ல பாடத்தை கற்று கொண்டோம்.

02.45 PM - எதிர்கால வரவு செலவுத்  திட்டத்தை தற்போது முன்வைக்கின்றேன்.

03.00 PM - புதிதாக அரசாங்க உத்தியோகத்தில் இணைந்து கொள்பவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்.

02.40 PM - 2014 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தி நூற்றுக்கு 10 வீதமாக குறைந்துள்ளது.

02.37 PM - கடந்த ஆட்சியில் வீதி அபிவிருத்திக்காக உலக நாடுகளிடம் கூடுதலாக கடன் பெறப்பட்டுள்ளது.

02.30 PM - கடந்த கால ஆட்சியில் நாட்டின் கடன் மாத்திரமே உயர்ந்துகொண்டிருந்தது.

02.27 PM - 2004 தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் நாட்டு மக்களின் முக்கிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

02.25 PM - கடந்த பத்து மாதங்களில் இலங்கையில் சமூக, பொருளாதார, அரசியலில் பாரிய மாற்றங்கள்.

02.20 PM - எதிர்காலத்தில் பலமான பொருளாதாரம் அவசியமாகும்.

02.15 PM - பத்து இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

02.03 PM - 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்ட உரை - நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்கவினால் சமர்ப்பிப்பு.

02.00 PM -  சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய அவைக்கு தலைமை வகிக்கிறார்

02.00 PM - தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான முதலாவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­ப­டவுள்ளது.