22122024Sun
Last update:Wed, 20 Nov 2024

ஓமந்தையில் பொருளாதார மையம் வேண்டும்

omanthai need economic center picket 1 0வவுனியாவில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பொருளாதார மையத்தை ஓமந்தைப் பகுதியில் அமைக்குமாறு கோரி வவுனியா நெடுங்கேணி மக்கள் இன்று (28) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுங்கேணி விவசாய அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டமானது வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக காலையில் இருந்து மாலை வரை இடம்பெற்றது.

ஓமந்தைப்பகுதியில் பொருளாதார மையம் அமையும் பட்சத்தில் அது விவசாயிகளுக்கு சௌகரியமாக அமையும் என்பதுடன் போதிய இடவசதியுள்ள இடமாகவும் அமையும் என உண்ணாவிரத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இவ்வுண்ணாவரதப் போராட்டத்தில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர் ஆர். இந்திராஜா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.