05022025Wed
Last update:Tue, 07 Jan 2025

ஐரோப்பிய ஒன்றிய மீன் ஏற்றுமதி தடை நீக்கம்

mahinda amaraweera ஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) விதிக்கப்பட்ட மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்று (21) இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில், 2014 ஒக்டோபர் மாதம் ஐரோப்பிய யூனியனால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச கடல் எல்லை தொடர்பான நிர்வாகம், கட்டுப்பாடு, மேற்பார்வை போன்றவை தொடர்பில் ஒழுங்கற்று செயற்படுவதாக தெரிவித்தே குறித் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்றைய தினம் (21) குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்த நிலையில், குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக, நேற்றுமுன்தினம் (19) மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளரால் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டிருந்ததோடு, பின்னர் அவ்வாறான அறிக்கையை தான் விடுக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.