22122024Sun
Last update:Wed, 20 Nov 2024

வவுனியாவில் ஒன்பதாயிரம் பேர் விண்ணப்பம்

vavunia house 9000 application 1மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் கீழான பொருத்து வீடுகளைப் பெறுவதற்கு வவுனியாவில் ஒன்பதாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட திணைக்கள புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 


யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மற்றும் மீள்குடியேறியுள்ள நிலையில் உள்ள ஒன்பதாயிரம் பேரே வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும் இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து விண்ணப்பிக்க தகுதியுள்ள பலர், இன்னும் விண்ணப்பிக்காத நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.vavunia house 9000 application 2