சம்பூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின்நிலையத்திற்காக, பொதுமக்களின் காணிகளை பெறுகின்ற அரசாங்கத்தின் செயலை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதாக அக்கட்சியின் தலைவரும் எதிக்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் வேறு தேவையின் பொருட்டு, வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பொதுமக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதாக தெரிவித்த அவர், தற்போது வரை சுமார் 820 ஏக்கர் காணியை இவ்வாறு பெறுவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு பெறப்பட்டுள்ள காணிகளை மக்களிடம் மீண்டும் கையளிக்கும் பொருட்டு, அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.