25112024Mon
Last update:Wed, 20 Nov 2024

ஜனாதிபதி ”புலு ரிச்” கப்பலை பார்வையிட்டார்………..

10 8ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (28) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான புலு ரிச் (Blue Ridge) கப்பலை பார்வையிட்டார்.

கப்பலுக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், அமெரிக்க கடற்படையினரால் இராணுவ மரியாதைகளுடன் கௌரவமாக வரவேற்கப்பட்டார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையே நட்புறவை வளர்க்கும் நோக்கில் புலு ரிச் கப்பல் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பின் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் இலங்கை வந்தடைந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

புலு ரிச் கப்பலுடன் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 900 வீரர்களை உள்ளடக்கிய குழுவொன்று இலங்கை வந்துள்ளதுடன், இவர்கள் இலங்கை கடற்படையுடன் குறுகியகால பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.

கப்பலை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், கப்பல் தலைவன் உட்பட பணிக்குழாத்தினருடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது.

01 02 04 06 07 10 12 13