இது சம்பந்தமாக தாம் சுகாதார அமைச்சர ராஜித சேனாரத்னவின் கவனத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நடவடிக்கை எடுப்பதோடு எதிர்கால மலையக சந்ததிகளை இவ்வாறான அனைத்து மோசடி களிலிருந்தும் மீட்பதை இலக்காகக் கொண்டு செற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தம்முடன் தொடர்பு கொள்பவர்கள் 0773059167 என்ற தொலைபேசி ஊடாகவும் என்ற மின் அஞ்சல் மூலமாகவும் விபரங்களை வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுகின்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக இலங்கையிலுள்ள 06 வைத்தியர்கள் தொடர்புபட்டுள்ளதாக இந்திய பொலிஸார் முறைப்பாடு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கையிலுள்ள பிரபல மருத்துவமனைகளுக்கும் இதில் தொடர்பிருப்பதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளதோடு இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.