புதிய அரசாங்கம் 2016 ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு புதிய யோசனைகளை முன்வைக்குமாறு நிதியமைச்சு அரச மற்றும் தனியார் துறையினரையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.
60 மாதத்தில் புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தல், ஊழல் மோசடிகளை இல்லாதொழித்தல், சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், உட்கட்டமைப்பு முதலீடுகளை மேம்படுத்தல், கல்வித்துறையை முன்னேற்றுதல் போன்ற நடவடிக்கைகளை அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆரம்பிக்க உத்தேசிக் கப்பட்டுள்ளது. இத்திட்டங்களில் பெரும் பிரதி பலனை மக்கள் பெற்றுக்கொள்வதை நோக்காகக் கொண்டே அரசாங்கத்தினால் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளன.
இதற்கிணங்க சிறந்த யோசனைகளை நிதியமைச்சின் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களத்துக்கு மக்கள் சமர்ப்பிக்க முடியும் என அதன் பணிப் பாளர் நாயகம் கே.டீ.என். ரஞ்சித் அசோக கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த யோசனைகளை வரவு செலவுத் திட்ட தயாரிப்பில் உள்ளடக்கும் வகையில் செப்டம்பர் முதல் இரு வாரங்களுக்குள் மேற்படி திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.