23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

ஜனாதிபதி வத்திக்கானில் பாப்பரசரை சந்தித்தார்

0211 1140x789பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (14) முற்பகல் வத்திக்கான் விசேட வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கைக்கு தான் விஜயம் செய்திருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட வரவேற்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட பாப்பரசர், இலங்கை உபசரிப்பும் நற்புறவும் நிறைந்த மக்களையும் இயற்கை அழகையும் கொண்ட ஒரு வளமான நாடு என ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இலங்கையின் ஐக்கியம் மற்றும் சகவாழ்வுக்காக ஜனாதிபதி முன்னெடுத்துச் செல்லும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தனது மகிழ்ச்சியை வெளியிட்ட பாப்பரசர், உலகில் இன்று இடம்பெறும் காலநிலை மாற்றத்தை தவிர்ப்பதற்கு சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.

ஆயுத உற்பத்தியை தவிர்த்தல், உலகில் யுத்தம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தவிர்த்தல் என்பவற்றுக்காக எடுக்கப்பட வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்திய பாப்பரசர், சமாதானத்திற்காக அர்ப்பணத்துடன் செயற்பட்ட ஒரு தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்கள் தொடர்பில் ஒரு நெருக்கமான அன்பை தனது உள்ளத்தில் உணர்வதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் தேசிய ஐக்கியம் மற்றும் சகவாழ்வுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பாப்பரசரின் ஆசீர்வாதம் ஒரு பெரும் பலம் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கையின் கத்தோலிக்க மக்கள் மட்டுமன்றி ஏனைய சகல சமய பக்தர்கள் மத்தியிலும் பாப்பரசர் குறித்த ஒரு பெரும் மதிப்பு இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சமாதானத்திற்கும் ஐக்கியத்திற்கும் அரப்பணித்த ஒரு தலைவராக தான் பார்ப்பதாகவும் குறிப்பிட்ட பாப்பரசர், சமாதானம் ஐக்கியத்தை அர்த்தப்படுத்தும் ஒரு விசேட நினைவுச் சின்னத்தையும், சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நீதி தொடர்பில் பாப்பரசரினால் வெளியிடப்பட்ட ஒரு நூலும் பாப்பரசரினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

பாப்பரசர் அவர்களை சந்தித்ததன் பின்னர் ஜனாதிபதி அவர்கள் வத்திக்கான் அரசாங்கத்தின் பிரதமர் பியட்ரோ பரோலின் கார்ட் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த திரு. பியட்ரோ பரோலின் கார்ட், அதற்கு தான் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

சமாதானம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களை எதிர்காலத்திலும் அதேவகையில் முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் திரு. பியட்ரோ அவர்களிடம் குறிப்பிட்டார்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ சமைய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, நகர திட்டமிடல், நீர் வழங்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாந்துபுள்ளே, பிரதியமைச்சர் அருந்திக்க பிரணாந்து, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புகாமி, பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி ரோசி சேனாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறித்த திசேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

07 02 03 04 06