23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

வாகன வரி விதிப்புகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது

ravi 1 Dec142016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள யோசனைகளை நீக்குவதற்கோ அல்லது குறைப்பதற்கோ எந்த வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

அதேநேரம் வாகனங்கள் தொடர்பாக வாகன விற்பனையாளர்கள் மாத்திரமல்லாமல் பாவனையாளர்களும் குழப்ப நிலைக்கு உள்ளாகக் கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை நிதியமைச்சில் நேற்றுமுன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினர். அச்சமயமே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 வரவுசெலவுத்திட்டத்தின் பின்னர் வாகன இறக்குமதியாளர்களின் கருத்தறியும் நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது. வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகள் திருத்தப்படும் என்ற ஆரம்பகட்ட கணிப்புக்கள் காரணமாக வாகன சந்தையில் ஓரளவு குழப்பநிலை ஏற்பட்டிருப்பது இச்சந்திப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆனால் இவை அனைத்தும் பொய் வதந்திகள் என்று அமைச்சர் அச்சமயம் தெரிவித்தார். நாம் வீழ்ச்சி அடைந்துள்ள நாட்டைமீளக் கட்டியெழுப்பவே முன்வைந்துள்ளோம். அதனால் நாம் தூரநோக்கின் அடிப்படையிலான வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம். அதனால் வாகன இறக்குமதிகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவுப்புக்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாது.

ஆகவே வாகன விற்பனையாளர்களும், எதிர்கால விலை குறித்து சிந்தித்துக் கொண்டிராது தற்போதைய விலையின் படியே கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுங்கள் என்றும் அமைச்சர் கூறினார். இந்சந்திப்பின் போது வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் குறிப்பிடுகையில் வரவுசெலவுத்திட்டத்தில் வாகனங்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள யோசனைகள் எதுவும் திருத்தப்படாது என்பதால் வாகனங்களின் விலைகள் விரைவில் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார்.