ஊழல், இலஞ்சமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப் பொருளின் கீழ் கொழும்பில் நேற்று விழிப்புணர்வுப் பேரணியொன்று நடத்தப்பட்டது. சமூக செயற்பாட்டாளார்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு ஏற்பாட்டில் நடந்த இந்த பேரணி சுதந்திர சதுக்கத்தில் முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கியஸ்தர்கள் உறுதிப்பிரமாணம் செய்து கொள்வதைப் படத்தில் காணலாம்.