23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

மாணவர் சீருடைக்கான வவுச்சர் முறை வெற்றி

n 4 Dec82 மாதங்களுக்கு மட்டுமே வவுச்சர் செல்லுபடியாகும்

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளைக் கொள்வனவு செய்வதற்காக அறிமுகப்படுத்தியிருக்கும் வவுச்சர் முறை வெற்றியளித்திருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்த வவுச்சர் முறையை தோற்கடிப்பதற்கு முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதுடன்,

இவ்வாறான முயற்சிகளை முறியடிக்கும் நோக்கில் சீருடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை அடுத்த வருடத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்னரே மாணவர்களின் கைகளில் கிடைக்கும் வண்ணம் வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இப்புதிய திட்டத்தின் கீழ் 95 வீதமான மாணவர்களுக்கு வவுச்சர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதுடன், எஞச்சிய ஐந்து வீதமான மாணவர்களுக்கு வவுச்சர்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளன. இவற்றை விரைவில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக கடந்த அரசாங்கத்தால் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த சீருடைகள் கடந்த மே மாதத்திலேயே மாணவர்களிடம் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்துக்கு பாடசாலை அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். சீருடைகளுக்காக வழங்கப்பட்டிருக்கும் வவுச்சர் இரண்டு மாதங்களுக்குச் செல்லுபடியாகும். இதற்கமைய பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை இதனைப் பயன்படுத்த முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.