காக்கைவலிப்பு நோய் தொடர்பாக நிலவும் மூட நம்பிக்கைகளை தோற்கடித்து எவ்வாறு வாழ்வை வெற்றிகொள்ளலாம் என்பதனை கலை ஆக்கத்தினூடாக வெளிக்கொணரும் கலை நிகழ்வில் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பங்கேற்றார்.
”மெஹெவர அசிறிய” எனும் பெயரில் காக்கைவலிப்பு செயலணியினரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலை நிகழ்வு தாமரைத் தடாக அரங்கில் நடைபெற்றது.
காக்கைவலிப்பு நோயை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணி, தேசிய காக்கைவலிப்பு பிரிவினை ஏற்படுத்துதல், அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய கலைஞர்களை பாராட்டுதல் என்பன இக்கலை நிகழ்வின் நோக்கமாகக் காணப்பட்டது.
காக்கைவலிப்பு நோய் தொடர்பான மூட நம்பிக்கையை விலக்கி எவ்வாறு வாழ்வினை வெற்றிகொள்வது என்பது பற்றிய பாடல்கள் மற்றும் நாடகங்கள் இங்கு ஆக்கபூர்வமாக அரங்கேற்றப்பட்டன.
இந்நிகழ்வின்போது ராஜித்த சேனாரத்ன, விஜயதாச ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால த சில்வா, சுசில் பிரேம ஜயந்த, ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன, டப்.டி.ஜே.செனவிரத்ன ஆகிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.