17072024Wed
Last update:Wed, 08 May 2024

நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாராட்டு

david cameron * இலங்கையில் ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க பிரிட்டன் தயார்

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் அடுத்த வருடம் நடுப்பகுதியளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் போர் குற்றங்களை விசாரணை செய்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நம்பத்தகுந்த பொறிமுறை குறித்து இலங்கை வரும் பிரதமர் கெமரூன் கூடுதல் கவனம் செலுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடந்த வெள்ளிக்கிழமை மோல்டாவில் சந்தித்து உரையாடியுள்ளார். இச்சந்திப்பானது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு மேலதிகமாக முன்னெடுக்கப்பட்டது. இச்சந்திப்பில் அமைச்சர்கள் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மோல்டா வந்திருந்த வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் பங் கெடுத்தார்.

சந்திப்பின் போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான பொறிமுறையொன்றை உருவாக்க பொதுநலவாயம் இலங்கைக்கு உதவிகளை வழங்குமெனவும் உறுதிமொழி வழங்கப்பட்டது.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களில் பெருந்தொகையான மக்களுக்கு சாதகமான பயன் கிடைப்பதனை இலங்கை ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும் எனவும் இச்சந்திப்பின்போது பிரிட்டிஷ் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

இதங்காக, இலங்கை அரசாங்கத் தினால் நடைமுறைப்படுத்தப்படும் சகல செயற்பாடுகளுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்குமெனவும் பிரதமர் கெமரூன் ஜனாதிபதி சிறிசேனவிடம் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் புதிய அரசாங்கத்தினால் இதுவரை முன்னெடு க்கப்பட்டுள்ள பொறப்புக்கூறல் மற்றும் நேர்மையான நல்லிணக்கச் செயற்பாடுக ளையும் பிரதமர் கமரூன் பாராட்டினார்.

கடந்த 10 மாதங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமைகள், ஜனநாயகம் நல்லிணக்கச் செயற்பாடு கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது பிரதமர் கெமரூனுக்கு விளக்கமளித்தார்.

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் : பிரிட்டிஷ் பிரதமர் பாராட்டு

இதேவேளை, இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு பிரிட்டன் நிதியுதவி வழங்கத் தயாராகவுள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்தார்.

இலங்கையில் குறுகிய காலத்தில் நிலைநாட்டப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாராட்டிய பிரதமர் கெமரூன், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவ தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மோல்டோ பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் ஜனநாயகத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட தமது அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரிட்டிஷ் பிரதமருக்குத் தெளிவுபடுத்தினார்.

இதனைப் பாராட்டிய பிரிட்டிஷ் பிரதமர் இலங்கையானது கடந்த பத்து மாத காலத்துக்குள் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் தமது திருப்தியை வெளியிட்டார்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியு ள்ளமை தொடர்பில் தமது பாராட்டை வெளிப்படுத்திய பிரதமர் மெகரூன் இந்த செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் ஜனநாயக ரீதியான நிறுவனங்களை மேலும் பலப்படுத்துவதற்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் விசேட நிதியுதவியை வழங்க தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கேட்டறிந்த அவர், தேவைகள் என்ன என்பது குறித்து தமக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரிட்டிஷ் பிரதமர் 60 மில்லியனில் விசேட நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறிப்பாக ஜனநாயகத்தை பலப்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விவகாரங்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். இதிலிருந்து இலங்கைக்கு நிதியுதவியை வழங்கத் தயாராகவுள்ளதாகவும் பிரதமர் கெமரூன் தெரிவித்தார்.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதாரத்துறை தொடர்பில் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. இதன்போது இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பிரிட்டிஷ் உதவவுள்ளதாக தமது விருப்பத்தை வெளியிட்டார்.

இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வது தொடர்பில் இரு தலைவர்களும் இதன் போது கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.