நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது, புதிய தேர்தல் முறையை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் இன்று (18) முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த அமைச்சரவை பத்திரங்கள் இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதை அடுத்தே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.