17072024Wed
Last update:Wed, 08 May 2024

இரண்டாயிரம் பேருக்கு இரட்டை பிரஜாஉரிமை

dual citizenshipவெளிநாட்டு குடியுரிமை பெற்ற 2,000 இலங்கையருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கும்  நிகழ்வு இன்று (17) காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற்றது.

வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளை மீண்டும் தாய்நாட்டுடன் இணைக்கும், நல்லிணக்கத் திட்டம் என்ற தொனிப்பொருளில் வெளிநாட்டு பிரஜா உரிமை பெற்றுள்ளோருக்கு இரட்டை பிரஜாஉரிமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில்   இடம்பெற்றது

1987ஆம் ஆண்டில் இலங்கைக்கு இரட்டை பிரஜாஉரிமை வழங்கும் செயன்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இது வரையில் சுமார் 40,000 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளதோடு, கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி தொடக்கம் இலங்கையில் இரட்டை பிரஜாஉரிமை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு,

2015 ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை அடுத்து மீண்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவ்வருடத்தில் இடம்பெற்ற இரு விழாக்களின் போது சுமார் 600 பேருக்கு இதற்கு முன்னர் இரட்டை பிரஜா உரிமை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.