20042025Sun
Last update:Tue, 07 Jan 2025

நிறைவேற்று முறைமையை ஒழிப்பேன் - தேரரின் உடல் முன் சபதம்

president Novநல்லாட்சி, நீதி, நியாத்துக்கான சமூகத்தை உருவாக்குதல் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் போன்ற விடயங்களில் மிக அதிக எதிர்பார்ப்புடன் செயற்பட்டவரே சோபித தேரர் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என, அன்னாரின் தேகத்திற்கு முன்னால் சபதமிட்டு கூறினார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, பாராளுமன்ற மைதானத்தில் இன்று (12) இராஜ மரியாதையுடன் இடம்பெற்ற சோபித தேரரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி, இவ்வாறு தெரிவித்தார்.

அதன் பின்னர் சகல கிரியைகளும் பூர்த்தி செய்யப்பட்டு சோபித தேரரின் உடல் அடங்கிய சிதைக்கு தீவைக்கப்பட்டு அவரது இறுதிக் கிரியைகள் நிறைவடைந்தது.