20042025Sun
Last update:Tue, 07 Jan 2025

திலக் மாரப்பன அமைச்சு பதவியிலிருந்து இராஜினமா

tilak marapanaபதிப்பு 02 :10.32am

சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன சற்று முன்னர் இராஜினாமா செய்துள்ளார்.

தனது வீட்டில் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

இதே வேளை இது குறித்த அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் கடந்த தேர்தலின்போது ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


 

பதிப்பு 01
திலக் மாரப்பன இராஜினாமா?

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன, தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இன்று (09) காலை 10 மணிக்கு தனது வீட்டில் விசேட ஊடக சந்திப்பொன்றை அமைச்சர் மாரப்பன ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவன் காட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் தொடர்பில், அமைச்சர் மாரப்பன பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு, அமைச்சரவை மற்றும் சிவில் சமூக நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

'அவன் காட் ஆயுத களஞ்சியத்தை பரிசோதித்தமையானது, பொலிஸார் தங்களின் திறமையை உயர்த்திக் காட்டுவதற்காக' என அமைச்சர் மாரப்பன பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதே வேளை அவன் காட் விடயம் குறித்தான விசேட அமைச்சரவை கூட்டம் இன்று (09) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.