20042025Sun
Last update:Tue, 07 Jan 2025

இலங்கையர் வெளிநாட்டில் சம்பாதிக்கும் வருமானத்திற்கு வரி விலக்களிப்பு

rani Nov 15புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கைத் திட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

மூன்றாவது பரம்பரையை இலக்குவைத்ததாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் ஊடாக கடந்த ஆட்சியினால் வீழ்ச்சியடைந்த எமது நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நாட்டை முன்னேற்றவும் அவசியமான பல வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மூன்றாவது பரம்பரைக்கான பொருளாதார கொள்கையை இலக்கு வைத்ததாகவே 20ஆம் திகதி புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்படும் எனவும், 2023ஆம் ஆண்டில் நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் நிறைவடையும் நிலையில் ஆசியாவின் பலம்வாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட இராச்சியமாக மாறுவதற்கு இலங்கைக்கு அவகாசம் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

நேற்று பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மொழி மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதாரக் கொள்கைத் திட்டத்தை பிரதமர் பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிற்பகல் 1.55 மணி முதல் சுமார் ஒரு மணித்தியாலங்கள் பிரதமர் உரையாற்றியிருந்தார். அரசின் பொருளாதார கொள்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு.