20042025Sun
Last update:Tue, 07 Jan 2025

சோமா எதிரிசிங்க காலமானார்

soma edirisingheEAP வணிக குழுமத்தின் பணிப்பாளர் சோமா எதிரிசிங்க (76), சற்றுமுன்னர் (05) காலமானார்.

 கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த வேளையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தேசபந்து, தேசசக்தி ஆகிய பட்டங்களைப்பெற்று, இலங்கையின் வர்த்தகத்தில் முன்னணி இடத்திலுள்ள அவர், சுவர்ணவாஹினி அலைவரிசை உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கு தலைமைத்துவம் வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 தனது கணவரான ஈ.ஏ.பி. எதிரிசிங்கவின் மரணத்தின் பின்னர், EAP வணிக குழுமத்திற்கு தலைமைதாங்கி, இலங்கை முழுவதும் வர்த்தக நடவடிக்கைகளிலும், சமூக சேவை செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தார்.

எதிரிசிங்க இன்வெஸ்ட்மென்ட், ஸ்வரண்மகால, எதிரிசிங்க டிவலபர்ஸ், ஈ.ஏ.பி. சினிமா, ஈ.ரி.ஐ. பினான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிபதியான இவர், ஜனசரண, சிங்க சமாஜ உள்ளிட்ட பல்வேறு சமூக நிறுவனங்களுக்கு தலைமைதாங்கி நடாத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.