23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார்?

tkn sampanthan pgiஜனநாயக முறையில் தமது கோரிக்கைகளை முன்வைத்து பேரணி நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ளும் வேலையின்மைப் பிரச்சினைக்கும் அரசாங்கம் உடனடியான தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அண்மையில் பேரணியில் ஈடுபட்ட எச்.என்.டி.ஏ மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் தொடர்பில் 23/2 நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பியபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்ட விடயத்தைச் சுட்டிக்காட்டி யிருந்தார். எச்.என்.டி.ஏ பாட நெறிக்கு உரிய அந்தஸ்தை வழங்கவேண்டும் எனக் கோரி மாணவர்கள் அமைதியான பேரணியொன்றை நடத்தியிருந்தனர்.

பேரணியின்போது பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தியிருந்தனர். இதனைத் தாண்டி மாணவர்கள் செல்ல முற்பட்டனர். இதன்போது தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் பின்னோக்கிச் சென்றனர். அவ்வாறு பின்னோக்கிச் சென்ற மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்த ப்பட்டது.

பேரணியில் வந்த மாணவர்களிடம் தடிகளோ, போத்தல்களோ எந்தவொரு ஆயுதங்களோ இருக்கவில்லை.

அவர்கள் சட்டத்தை மீறி நடக்க முற்படவுமில்லை.

இவ்வாறான நிலையில் ஏன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது? சாதாரண பொலிஸ் அதிகாரிகள் அவ்வாறு நடந்து கொள்வதற்கு உத்தரவிட்ட உயரதிகாரிகள் யார்? இவ்வாறான தாக்குதலை தடுக்காமல் இருந்த உயரதிகாரிகள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படுத்துவது அவசிய மாகும்.

தமது கோரிக்கைளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மாணவர் களுக்கு உரிமை உள்ளது. வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே எச்.என்.டி.ஏ மாணவர்கள் தமது பாடநெறிக்கான அங்கீகாரத்தை அதிகரிக்க வேண்டும் எனக் கோரி யிருந்தனர்.

இலங்கையின் கல்வி முறையில் காணப்படும் குறைபாடே இதற்குக் காரணமாகும். குறிப்பாக இலங்கையின் கல்வி முறையானது தொழிற்சந்தைக்கு ஏதுவானதாக இல்லை.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய் ப்புக்கள் இன்றி இருக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் பல இளைஞர் யுவதிகள் இந்த நிலையை எதிர்கொண் டுள்ளனர். அரசாங்கம் வடக்கு, கிழக்கில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதன் பின்னர் உரையாற்றிய எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அநுர குமார திசாநாயக்க, மனித உரிமை களைப் பாதுகாப்பதாக சர்வதேசத்திடம் உறுதிவழங்கிவிட்டு வந்திருக்கும் அரசாங்கம் பேரணியில் ஈடுபட்ட அப்பாவி மாணவர்கள் மீது மிலேச்சத் தனமான தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் ஆணைக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் கூறுகிறது. இதற்கு முன்னரும் பல விசாரணை ஆணைக்குழுக்களைப் பார்த்திருக் கின்றோம்.

இவ்வாறான பின்னணியில் இச் சம்பவம் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை.

மாணவர்கள் மீது பொலிஸார் ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என்பதற்கு அரசாங்கம் பதிலை வழங்க வேண்டும் எனவும் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரதமர் வாழ்த்து

கொழும்பில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வியெழுப் பியமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். வட பகுதி மக்களின் பிரச்சினைகள் மாத்திரமன்றி தென்பகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தேசிய தலைவர் என்ற ரீதியில் எதிர்க்கட்சித் தலைவர் செயற்படுவார் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.