கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகளை எதிர்வரும் நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
ரூபா 125 மில்லியனை இலஞ்சமாக பெறும் போதே குறித்த சந்தேகநபர்களான சுங்க அதிகாரிகள் மூவுரம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனது தரப்புக்காரரான இரண்டாவது சந்தேகநபரை பார்வையிடுவதற்கு, குருவிட்ட சிறையின் பிரதான சிறைக்காவல் அதிகாரி அனுமதிக்கவில்லை என வழக்கறிஞர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் கருத்திற்கொண்ட நீதிபதி, குறித்த சந்தேகநபர்கள் மூவரும் சிறைவைக்கப்பட்டுள்ள குருவிட்ட சிறையின் பிரதான சிறைக்காவல் அதிகாரியை, அடுத்து வழக்கு இடம்பெறும் திகதியன்று ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.