23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இருவாரத்தில்

pres 01 1பாரிய மோசடிகள்

* எவன்கார்ட் கப்பல் விசாரணை இன்று
* மஹிந்தவிடம் மீண்டும் நாளை விசாரணை
* 30இல் நிசாந்த விக்கிரமசிங்க, பிரியங்கர ஜயரட்ன

பாரிய மோசடிகள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு இது வரை மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பில் இரு வாரங்களில் ஜனாதிபதிக்கு இடைக்கால அறிக்கை ஒன்றை கையளிக்க இருப்பதாக ஆணைக்குழு செயலாளர் லெசில் த சில்வா தெரிவித்தார். விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றும் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் போது பணம் செலுத்தாமல் விளம்பரம் செய்து மோசடி செய்தது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நாளையும் நாளை மறுதினமும் (29, 30) விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தவிர விமான சேவையில் இடம்பெற்ற மோசடி குறித்து முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன (தற்போதைய சட்டம் ஒழுங்கு ராஜாங்க அமைச்சர்) மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை தலைவராக இருந்த சிரந்தி ராஜபக்ஷவின் சகோதரர் நிசாந்த விக்ரமசிங்க ஆகியோர் நாளை மறுதினம் (30) விசாரிக் கப்பட இருப்பதாகவும் லெசில் த சில்வா குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்பி அதற்காக 101 மில்லியன் ரூபா

செலுத்தாமை மற்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரங்களை ஒளிபரப்பாது நஷ்டத்தை ஏற்படுத்தியமை ஆகியவை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.ம.சு.மு. முன்னாள் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த், ஐ.ரி.என். முன்னாள் தலைவர் மற்றும் ஐ.ரி.என். உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மீண்டும் விசாரிக் கப்பட இருப்பதாக ஆணைக்குழு செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த ஆட்சியில் ஸ்ரீலங் கன் விமானச் சேவையில் கேட்டரிங் (விataring) சேவையில் இடம்பெற்ற மோசடி குறித்து விசாரிப்பதற்காக நிசாந்த விக்ரமசிங்கவும் முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத் னவும் 30 ஆம் திகதி அழைக்கப்பட் டுள்ளனர்.

இது தவிர 2010 இல் நடைபெற்ற ஹம்பாந்தோட்டை துறைமுக ஆரம்ப விழாவில் இடம்பெற்ற நடன நிகழ்ச்சிகளுக்காக 150 இலட்சம் ரூபா செலவிடப்பட்ட முறைகேடு குறித்தும் பாரிய மோசடி விசாரணை பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கெனவே நடன குழுவைச் சேர்ந்த சன்ன, உபுல ஆகியோர் விசாரிக்கப்பட்டனர். இது தவிர பிரபல நடிகர் ஜெக்சன் எந்தனி, துறைமுக அதிகார சபை நிதிப்பணிப்பாளர் ஆகியோரையும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக லெசில் த சில்வா குறிப்பிட்டார்.

எவன்கார்ட் மிதக்கும் கப்பல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக பாரிய மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று (28) காலி துறைமுகத்திற்கு சென்று நேரில் விசாரணை முன்னெடுக்க உள்ளனர்.

குறித்த ஆணைக்குழு ஏற்கெனவே ஆணைக்குழுவின் முன்னேற்ற அறிக் கைகள் இரண்டை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய 6 மோசடிகள் குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார்.