தேசிய அரசாங்கத்தின் நல்லாட்சியில் அனைத்து இனத்தவரும் அவரவர் சமய வழிபாடுகளை எவ்வித தடையுமின்றி மேற்கொள்வதற்கு முழுமையான சுதந்தி ரம் கிடைத்துள்ளது என கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரே ஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் ஒழுங்கு செய்திருந்த வாணி விழா (22) மாநகர சபையின் யாழ். வளாகத்தில் இடம்பெற்றது. இதில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற் றுகையிலேயே அவர் இதனைக் குறிப் பிட்டார்.
சிரேஷ்ட சுகாதாரத் தொழி லாளர் கே.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது,
கடந்த காலங்களில் சிறுபான் மைச் சமூகத்தினர் சமய வழி பாடுகளை மேற்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற் படுத்தப்பட்டன. தற்போது அந்நிலை மாற்றமடைந்துள்ளது. எமது நாட்டில் தற்போது மதச் சுதந்திரம் முழுமையாக காணப்படுகின்றது. அதேவேளை ஓர் உள்ளூராட்சி மன்ற த்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் சுகாதாரத் தொழிலாளர்களே.
அவர்களது அர்ப்பணிப்பு மிக்க சேவையே அந்த உள்ளூராட்சி மன்றத்தின் நற்பெயரை காப்பாற்றுகின்றது. ஒரு பிரதேசத் தின் சுத்தம், சுகாதாரத்தை பேணு வதில் இவர்களது அளப்பரிய பங்களிப்பு அவசியமாகும்.
இதன் காரணமாகவே எமது மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களை கெளரவிக் கும் வகையில் எமது முதல்வரின் வேண்டுகோளின் பேரில் நாங்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. ராஜேஸ்வரன், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், கல்முனை முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக், மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எம்.ஆரிபின் உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.