காலநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் மட்டக்களப்பு. அம்பாறை மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நமது நிருபர்கள் அறிவித்துள்ளார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவரும் கடும் மழையினால் ஆலையடிவேம்பு, திருக்கோயில் மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் பெரும்போக நெற் செய்கையில் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
மூன்று தினங்களாக இப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் சிறிது வெள்ளப் பெருக்கு ஏற்ப ட்டுள்ளதுடன் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட் டுள்ளன.
இதனால் பெரும்போக வேளாண்மைகளின் விதைப்பு வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வயல் நிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாகப் பெய்துவரும் அடைமழையினால் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் அனைத்திலுமுள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் உள் பாதைகளில் வெள்ள நீர் ஓடுகின்றதுடன், தகர மற்றும் கிடுகுக் கூரைகளினால் கட்டப்பட்ட வீடுகளின் உள்ளே வெள்ள நீர் புகுந்து இருப்பிடங் களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்கள் வாழும் அக்கரைப்பற்று பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளன. அக்கரைப்பற்றின் பாதைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் தங்களது வர்த்தக நிலையங்களுக்கும், அன்றாட தேவைகளை நிறைவு செய்ய செல்லவும் முடியாமல் வீடுகளில் மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். முற்றாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மட்டு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. கடந்த 24ம் திகதி காலை 8.30 மணி முதல் 25ந் திகதி காலை 8.30 மணிவரையான 24 மணிநேரத்தில் 182.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே. சூரியகுமார் தெரி வித்தார்.
இம்மாவட்டத்தில் இடைவிடாது தொடர்ந்து பெய்யும் அடை மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்கு வரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
காத்தான்குடி, ஆரையம்பதி, கொக் கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி உட் பட பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடும் மழை பெய்துள்ளது. தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.