17072024Wed
Last update:Wed, 08 May 2024

சமாதானம் நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புகளுக்கு சமயத் தலைவர்கள் பாராட்டு

0320 1140x488சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு இன்று (21) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தது.

 இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிகழ்ச்சித் திட்டங்களை பாராட்டிய சமயத் தலைவர்கள், இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் வெற்றிக்கு தங்களது நல்லாசிகளையும் தெரிவித்தனர்.

மூன்று தசாப்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தேசமான இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தம் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, சகல இனங்களுக்கிடையேயும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிபெறச் செய்வதற்கு சகல சமயத் தலைவர்களினதும் உதவி அவசியமானது என்றும் தெரிவித்தார்.

சர்வதேச மட்டத்தில் இலங்கை சார்பாக சமயத் தலைவர்களின் தலையீடு அவசியமானதாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, சமாதானத்திற்கான சமய மாநாடு போன்ற சந்தர்ப்பங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

பேராசிரியர் பெல்லன்வில விமலரத்தன தேரர், பிராமன்வத்தே சீவலி தேரர் மற்றும் சமயத் தலைவர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

02