17072024Wed
Last update:Wed, 08 May 2024

அதிகாரங்களுக்கு புறம்பாக செயற்பட்டோருக்கு நடவடிக்கை

RANIL ndk 4 150pxஎவன்கார்ட் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை

அரசாங்க அதிகாரி எவராவது தங்களுக்குள்ள அதிகாரத்துக்கு புறம்பாக செயற்பட்டிருப்பது நிரூபணமானால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சிய த்திலுள்ள ஆயுதங்களுக்கு இலங்கை அரசாங்கத்தினூடாக அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், ஆயுத களஞ்சியம் குறித்த விசாரணைகளை மூடிமறைக்க சட்டமாஅதிபர் எதுவித நடவடிக் கையும் எடுக்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.

எவன்கார்ட் ஆயுத களஞ்சியம் தொடர்பில் எதிர்த்தரப்பு பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மேலும் கூறியதாவது, எவர்ன்கார்ட் நிறுவனத்திற்கும் நைஜீரிய நிறுவனத்துக்குமிடையில் செய்துகொள் ளப்பட்ட ஒப்பந்தத்தில் மத்தியஸ்தராக நைஜீரிய தூதுவராக பணியாற்றிய ஏ.எஸ்.பி.லியனகே கைச்சாத்திட்டமைக்கு பாதுகாப்பு அமைச்சில் எதுவித ஆவணமும் கிடையாது.

மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை சர்வதேச கடலில் தரித்து வைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சர் அனுமதி வழங்கி யிருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் ஜயரத்ன 2012.09.18 ஆம் திகதி கடிதம் மூலம் எவர்ன்கார்ட் நிறுவன தலைவருக்கு அறிவித்துள்ளார். ஆனால் ஆயுத களஞ்சி யத்தை காலி துறைமுகத்தில் நங்கூரமிடு வதற்கு வழங்கப்பட்ட அனுமதி தொடர்பான ஆவணம் எதுவும் பாதுகாப்பு அமைச்சில் கிடையாது.

இதிலுள்ள ஆயுதங்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் அனுமதிப்பத்திரம் வழங்கப் படவில்லை. கடந்த ஜனவரி 18ஆம் திகதி மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை சுற்றி வளைக்கும் வரை பொலிஸார் இது குறித்து அறிந்திருக்கவில்லை.

சகல தனியார் ஆயுதங்கள் தொடர்பிலும் பாதுகாப்பு செயலாளர் வழங்கும் ஆயுத அனுமதிப்பத்திரம் இருக்க வேண்டும். ஆயுதம் குறித்து கண்காணிக்க பொலி ஸாருக்கு அதிகாரம் இருக்கிறது. மிதக்கும் ஆயுத களஞ்சியத்திலுள்ள ஆயுதங்களுக்கு ஆயுததத்துக்கு சொந்தமான நாடுகளில் இருந்து அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட் டுள்ளன. இந்த ஆயுதங்கள் கடற்படையின் கண்காணிப்பின் கீழ் கையேற்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.

எவன்கார்டுக்கு சொந்தமான மிதக்கும் ஆயுத களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை விநியோகிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படவில்லை. அதனால் ஆயுதங்களின் தொகை மற்றும் அவை எந்த நாட்டுக்குரி யவை என்பதற்கான ஆவணங்களும் பாதுகாப்பு அமைச்சிடம் கிடையாது.

சீ.ஐ.டி முன்வைத்த எழுத்துமூல கோரிக்கைக்கு பதில் வழங்கும் வகையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பஸ்நாயக்க சீ.ஐ.டிக்கு கடிதம் அனுப்பி யிருந்தார். எவன்கார்ட் தலைவரின் வெளிநாட்டு கடவுச்சீட்டு தொடர்பில் அவர் நீதவானுக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை. சீ.ஐ.டி விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சட்டமாஅதிபரின் ஆலோசனை பிரகாரம் வெளிநாடு செல்ல இடமளிப்பது உகந்தது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையின் அறிக்கை கிடைத்த பின்னர் உகந்த நடவடிக்கை மேற்கொள் ளப்படும். எவன்கார்ட் சம்பவம் தொடர்பான விசாரணையில் சட்டமா அதிபர் தலையீடு எதுவும் மேற்கொள்ள வில்லை. சட்டமா அதிபர் எந்த சந்தர்ப்பத் திலும் குற்றச்சாட்டை மறைக்கவில்லை.

2015 ஜூன் 14 -17 மற்றும் ஒக்டோபர் 6 ஆகிய திகதிகளில் எவர்ன்கார்ட் சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடத்துமாறு அவர் பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார். மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் லஞ்ச ஊழல் திணைக்களம் விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதால் வேறு விசாரணை அவசிய மில்லை.

கடல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சி வழங்குவதற்கு எவன்கார்ட் நிறுவனத்துக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அவன்கார்ட் நிறுவனம் தனியார் நிறுவனம் என்பதால் அதன் செலவுகள் அது வழங் கிய அன்பளிப்புக்கள் குறித்து அரசாங்கத்திடம் தரவுகள் கிடையாது. ஆனால் நிதி சட்டத்தின் கீழ் ஏதாவது தவறு செய்துள்ளதா என சீ.ஐ.டி விசாரணை இடம்பெறுகிறது.

ரக்னா லங்காவுக்கும் அவன்கார்ட் நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தப் பிரகாரம் அவன்கார்ட் நிறுவனம் 1014 மில்லியன் ரூபா வழங்கியுள்ளதோடு மேலும் 475 மில்லியன் ரூபா பணம் ரத்னா லங்காவுக்கு செலுத்த வேண்டும்.

எனது முன்னிலையில் நடந்த கூட்டத்தில் எவன்கார்ட் தொடர்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாலும், சொலிசிட்ட ஜெனரலாலும் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சட்டம் தொடர்பில் சட்டமா அதிபரே ஆலோசனை வழங்குகிறார் என்றார்.