ஜெனீவா அறிக்கை, நடப்பு விவகாரம்
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் ஐ. நா. மனித உரிமை பேரவை அறிக்கை தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு, ஆராய்வதற்கான சர்வகட்சி மாநாடு எதிர்வரும் 22ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் 22ம் திகதி பிற்பகல் இந்த சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளதுடன் அதற்கு முன்னோடியாக நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரைச் சந்திக்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடாகியிருந்தது.
22ம் திகதி நடைபெறும் இம்மாநாட்டில் ஜெனீவா மனித உரிமை பேரவை அறிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்களினது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்கென பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் பாராளுமன்றத்துக்கு வெளியே உள்ள முக்கிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சகல கட்சிகளினதும் செயலாளர்களுக்கு இது தொடர்பான கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட் டுள்ளன.
ஜெனீவா அறிக்கை தொடர்பில் தற்போது பல்வேறு கட்சிகளும் பலவித மான கருத்துக்களையும் விமர்சனங்களை யும் முன்வைத்து வருகின்றன.
இதனைக் கருத்திற் கொண்டு அன்றைய தினம் கட்சித் தலைவர்களினது கருத்துக்கள் பெறப்பட்டு அதன் பின்னர் அரசாங்கம் தமது தீர்மா னத்தை எடுக்கவுள்ளது.
ஜெனீவா அறிக்கையின் உள்ளடக்கம் அது தொடர்பிலான பொறிமுறையொன்றை எவ்வாறு அமைப்பது அதற்கு எந்தளவில் சர்வதேச ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது போன்றவை தொடர்பில் இம் மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.
அதனையடுத்து ஜனாதிபதியவர்கள் மதத் தலைவர்களை சந்திக்கவுள்ளார். மதத் தலைவர்களுடனான சந்திப்பின் பின் னர் சிவில் அமைப்புக்களின் கருத்துக்களை யும் பெற்றுக்கொள்ள சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.