தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்:
பிரதமர் தலைமையிலான குழு 20ம் திகதி கூடி ஆராயுமென உறுதி
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்புக்காவல் மற்றும் சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பில் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையில் பிரஸ்தாபித் துள்ளார்.
நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கினார்.
இங்கு தமிழ் அரசியல் கைதிகளின் நிலை தொடர்பாக அமைச்சர் மனோ கணேசன் கடும் தொனியில் எடுத்து ரைத்தார்.
இக்கைதிகளில் ஒரு பிரிவினர் விசாரணை கைதிகளாகவும், ஒரு சிலர் வழக்கு கைதிகளாகவும், பிறிதொரு பிரிவினர் தண்டனை கைதிகளாகவும் தமது வாழ் நாளில் கணிசமான பகுதியை சிறையில் கழித்து வருவதையும், அவர்கள் கொழும்பு, கண்டி, அநுராதபுரம், யாழ்ப்பாணம் சிறைகளில் உண்ணாவிரதம் இருப்ப தையும் அவர் சுட்டிக்காட்டியதோடு அவர்களில் சிலரின் நிலை கவலைக் கிடமாக இருப்பதாகவும் சிறை 5க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சியில் நிலவிய நிலைமை தமது நல்லாட்சியில் நிலவுவதை நீடிக்க விடக்கூடாது எனவும் எடுத்து கூறினார்.
அமைச்சரின் கூற்றுக்கு பதில ளித்த ஜனாதிபதி; இந்த விவகாரம் தொடர்பில், பிரதமர், நீதி அமைச்சர், சிறைச்சாலைகள் அமைச்சர் ஆகியோர் சட்டமா அதிபருடன் ஆராய்ந்து தனக்கு அறிவிக்க வேண்டுமென பணிப்புரை விடுத்தாரென ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிறைத்துறை அமைச்சர் திலக் மாரப்பன, தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரை உள்ளடங்கிய குழு தனது தலைமையில் சட்டமா அதிபரை அழைத்து கலந்துரையாடி இப்பிரச்சினையை மேலும் நீடிக்க விடாது தீர்க்க வேண்டும் என்பதுவே தனது நிலைப்பாடு என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந் நிலையில், தான் தனது (இன்று) சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும், 20ம் திகதி இது தொடர்பான முதற்கூட்டத்தை நடத்து வோமென அமைச்சர் மனோ கணேசனிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதிய ளித்துள்ளார்.
இந்தத் தகவலை அரசியல் கைதிகளிடம் நேரடியாக தெரிவிப்பதற்காக அமைச்சர் மனோ கணேசன் கொழும்பு சிறைச் சாலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.