6 மாதகால செயற்பாடுகளில் திருப்தி இல்லையென்கிறார் பிரதமர்
கடந்த 10வருட காலத்தில் மத்திய வங்கியில் இடம் பெற்ற சகல கொடுக்கல் வாங்கல் குறித்து விசார ணை நடத்துவதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மத்திய வங்கியின் கடந்த 6 மாத கால செயற்பாடுகள் தொடர்பில் தான் திருப்தி அடையவில்லை என்று தெரிவித்த அவர் இதன் காரணமாகவே மத்திய வங்கியில் அண்மைக்கால இடமாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மத்திய வங்கியில் பக்கச்சார்பாக இடமாற்றங்கள் மேற்கொள்ளப் படுவதாக தெரிவித்து ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன 17 ஆவது நிலையியற்கட்டளையின் கீழ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அவசர கேள்வி ஒன்றை முன்வைத்தார். இதற்குப் பதிலளித்தபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், மத்திய வங்கியின் கடந்த கால செயற்பாடுகள் குறித்து திருப்தி அடைய முடியாது. இங்கு பணியாற்றும் பலர் ஒரே பிரிவில் ஐந்து வருடங்களுக்கும் மேலாகப் பணிபுரிந்து வருகின்றனர். யார் இதற்கு அனுமதி வழங்கியவர்கள். அவ்வாறானவர்களே அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.
செயற்றிறன் அற்ற 5 வருடத்துக்குக் குறை வாகப் பணியாற்றியவர்களும் இடமாற் றப்பட்டவர்களிடையே அடங்குகின்றனர். நான் விரைவில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்கள் மற்றும் உதவி ஆளுநர்களை சந்திக்கவிருக்கிறேன்.
கெட்ஜிங் கொடுக்கல்வாங்கல் போன் றனவும் இங்கிருந்தே மேற்கொள்ளப் பட்டன. இதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார். ஊழியர் சேமலாப நிதியை முதலீடு செய்து நஷ்டம் ஏற்படுத்திய விடயம் தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும். கடந்த காலத்தில் பொருளாதார புள்ளிவிபரங்கள் கூட மாற்றப்பட்டிருக்கின்றன. கடந்தகால முறைகேடுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் இடமாற்றப்பட வேண்டும்.
கடந்த 10 வருடங்களில் மத்திய வங்கியில் இடம்பெற்ற சகல கொடுக்கல் வாங்கல் குறித்தும் தெரிவுக்குழு குறித்து ஆராயவிருக்கிறோம். மத்திய வங்கிக்கு புதியவர்களை நியமிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கடந்த காலத்தில் வீடுகள் நிர்மாணிப்பதற்கு நிதி வழங்கப்பட்ட போதும் தேவையான நிதி ஒதுக்கப்பட வில்லை. நஷ்டஈடு வழங்குவதற்காக 400 பில்லியன் செலுத்தவேண்டியுள்ள போதும் இதற்காக ஐந்து சதம் கூட ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.
இவை குறித்து மத்திய வங்கி ஆராய்ந்திருக்க வில்லை. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து இன்று ஆட்சியமைத்துள்ளன. இந்த நிலையில் இங்கு முதலீடு செய்ய பலரும் தயாராக இருக்கின்றார்கள். மத்திய வங்கியில் தேவையான அதிகாரிகள் இல்லாவிட்டால் நாம் என்ன செய்ய முடியும் என்றார்.
17வது நிலையியற்கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பிய தினேஷ் குணவர்த்தன எம்.பி, மத்திய வங்கி மீதான நம்பிக் கைக்கும் கெளரவத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் மத்திய வங்கி அதிகாரிகள் 200 பேர் இடமாற்றப்பட் டுள்ளார்கள். மத்திய வங்கி வரலாற்றில் ஒருபோதும் இவ்வாறு நடந்தது கிடையாது. வழமைக்கு மாறாக இவ்வாறு இடமாற்றம் நிகழ்ந்திருக்கிறது.
மத்திய வங்கியில் இடம்பெற்ற திறைசேரி முறி மோசடி தொடர்பான விசாரணை யின்போது பாராளுமன்றத்தில் சாட்சிய மளித்த அதிகாரிகளை பழிவாங்கும் வகையில் இடமாற்றங்கள் மேற்கொள் ளப்பட்டி ருக்கிறது. இந்த இடமாற் றங்களை உடனடியாக நிறுத்துமாறு இந்தப் பாராளுமன்றம் அரசாங்கத்திடம் பிரேரிக்கிறது என்றார்.
எம்.எஸ்.பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்