23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

புதிய தேர்தல் முறை சிறுபான்மையினருக்கு பாதிப்பு

rishathசிறுபான்மை சமூகத்தின் நலனை கவனத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் தமது கட்சியின் நிலைப்பாட்டினையும் விளக்கியுள்ளார்.

 பிரதமர் ரணில் விக்கிரமசிங் கவை (30) சந்தித்து தற்போது நடைபெற உத்தேசித்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான முறைமூலம் சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகள் மற்றும் பிரதி நிதித்துவம் என்பன தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.

இது தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதமருக்கு நினைவுபடுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இது தொடர்பில் பேசப்பட்ட வட்டார முறை யின் மூலம் அவசரமாக தேர்தல் நடத் தப்படுவதன் மூலம் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதி உள்ளூராட்சி மன்ற பிரதிநிதித்துவங்களின் இழப்பு குறித்தும் அப்போது விளக்கி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது அதி ருப்தியினை வெளிப்படுத்தியது.

இதனை இடைநிறுத்துமாறு வலியுறுத்தியதால் அப்போதைய பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ அளித்த உறுதி மொழியினையடுத்து இது நிறுத்தப் பட்டிருந்தது.

அதேவேளை சிறுபான்மை மக்கள் சகல தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியினையே ஆதரித்து வந்துள்ள தாகவும் இந்த சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் உரிமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க உரிய நடவடிக்கையினை எடுக்க வேண் டும் என்பதையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடம் வலியுறுத்தியுள்ளார்.