23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

இலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை; எச்சரிக்கையுடன் வரவேற்பு - உலக தமிழர் பேரவை

suren surendiran007இலங்கை அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்க விரும்பும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இலங்கை தொடர்பான பிரேரணையை எச்சரிக்கையுடன் வரவேற்பதாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வரவேற்றும் அதேநேரம், ஐ.நாவின் பரிந்துரைகளை வெறும் வார்த்தைகளில் அன்றி நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இது நியாயமான நடவடிக்கைகளை பரீட்சிப்பதாக அமையும் என்றும் உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப் பட்டிருக்கும் பிரேரணை குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறி முறையொன்று அமைக்கப்பட வேண்டும் என்றே தாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தபோதும், தற்பொழுது சமர்ப்பிக் கப்பட்டிருக்கும் அறிக்கையில் குறைபாடு காணப்படுகின்றது. இருந்தபோதும் நம்பகமான பொறுப்புக் கூறல் பொறிமுறையில் கணிசமான சர்வதேசப் பங்களிப்பைப் பெற வேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என்றும் உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட் டியுள்ளது.

இரண்டு தரப்பினராலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதுடன், இலங்கை தொடர்பான நகல் பிரேர ணையானது அரசாங்கத்துக்கு தமது இலக்கை அடைவதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக பல்வேறு தரப்பினருடனும், பல்வேறு உலக நாடுகளுடனும் பரந்துபட்ட கலந்துரையாடல்களை உலகத் தமிழர் பேரவை நடத்தியிருந்தது. இதன் பயனே இவ்வாரம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் உலகத் தமிழர் பேரவை கூறியுள்ளது.

இரண்டு தரப்பாலும் பாதிக்கப்பட்ட வர்கள் கடந்த 6 வாரங்களாக தமக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்தி ருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை சர்வதேச சமூகம் வீழ்ச்சியடைய அனுமதிக்காது என்ற நம்பிக்கை உள்ளது.

பாதிக்கப்பட்ட சகலருக்கும் நியாயம் கிடைக்கக் கூடிய உண்மையான பொறுப் புக்கூறல் உறுதிசெய்யப்படும் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாகவும் உலகத் தமிழர் பேரவை மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.