23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

அமெரிக்காவின் நகல் பிரேரணை: ஜெனீவாவில் இன்று கலந்துரையாடல் ஆரம்பம்

untitled 1 pictureஇலங்கை அரசின் செயற்பாடுகளில் பிஸ்வால் நம்பிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவினால் முன்வைக்கப்படவிருக்கும் தீர்மானத்துக்கு ஆதரவு பெருகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 அமெரிக்காவால் முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணையின் நகல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் இதுதொடர்பான கலந்துரையாடல் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பிரேரணையின் நகல் வரைபு எதிர்வரும் 24ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியி டப்பட்ட இலங்கை மீதான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக் கப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதனை ஊக்குவிக்கும் வகையில் அமெரிக்கா இலங்கைக்கு சாதகமான பிரேரணையொன்றை நிறைவேற்றவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத் தொடரின் ஆரம்பநாளில் இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றும்போது குறிப்பிட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவை அமைப்பது, காணாமல் போனவர்களுக்கான அலு வலகமொன்றை நிறுவுதல், நஷ்டஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான அலுவலகத்தை அமைத்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் மனித உரிமையை உறுதிப்படுத்துவதுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன், வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்பதுடன், மக்களின் அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தனது பிரேரணையில் வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டிருக்கும் பிரேரணையின் நகல் ஏற்கனவே இலங்கைத் தரப்பினரிடம் கையளிக்கப்பட்டிருப்பதுடன், இது தொடர்பான விவாதங்கள் இன்றையதினம் ஆரம்பமாகவுள்ளன. இந்த விவாதங்களைத் தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி முன்வைக்கப்படவிருக்கும் இலங்கை தொடர்பான இறுதிப் பிரேரணை இரு தரப்பு இணக்கத்துடனும் முன்வைக் கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.

அமெரிக்காவின் இந்தப் பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், ஆதரவு தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகத் தெரியவருகிறது.

இந்த நிலையில், புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஸா பிஷ்வால் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது சிறந்ததொரு சமிக்ஞையாக இருப்பதுடன், இலங்கை அரசாங்கத்துக் கும், ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக் கும் நீண்டதூரம் இன்னமும் முன்நோக் கிச் செல்லவேண்டியிருப்பதாக அவர் இந்திய ஊடகமொன்றுக்குத் தெரிவித் துள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது நீண்டதொரு செயற்பாடாகும். இது மிகவும் கடினமானதும் கூட. எதிர்பாராத சில பின்னடைவுகளும் ஏற்படக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையிலுள்ள சகல மக்களும் அமைதியான சூழலில் வாழவேண்டும். இதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பு என்றும், இதற்கான சந்தர்ப்பத்தை இலங்கை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.