16072024Tue
Last update:Wed, 08 May 2024

ஒலுவில் துறைமுகத்துக்கு மு.கா, ம.கா தலைவர்கள் ஏட்டிக்கு போட்டி விஜயம்

Tamil1409 2ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் பாரிய கடலரிப்பினையும் இவ் அனர்த் தத்தின் மூலம் ஏற்பட்டுள்ள அழிவுகளையும் நேரடியாகப் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சரு மான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இவ்விஜயத்தினை மேற் கொண்டனர்.

இவர்கள் துறைமுகத்தினை அண்டிய வெளிச்சவீட்டுப் பகுதியில் மிக மோசமாக இடம்பெற்றுவரும் கடலரிப்பினையும் இதன் மூலமான அழிவுகளையும் பார்வையிட்டதுடன், இவ் அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் போன் றோரையும் சந்தித்துக் கலந்துரை யாடினர்.

கடலரிப்பு என்பது ஒலுவில் பிரசேத்தின் ஒட்டு மொத்தப் பிரச்சினையாகும். கடலரிப்பின் காரணமாக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் இல்லாமல் போனதாகவும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப் பட்டுள்ளதாகவும், 500 இற்கும் அதிகமான தென்னை மரங்கள் அழிவடைந்துள் ளதாகவும் அமைச்சர்களிடம் இப்பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

இது தவிர துறைமுக நிர்மாணத்தின் போது இப்பகுதி மக்கள் சிலர் இழந்த காணிகளுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படாமை பற்றியும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் பலருக்குமான நிவாரணம் வழங்கப்படாமை பற்றியும் பிரதேச மக்கள் இதன்போது தெரிவித்தனர்.

ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பகுதியில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் இதன்போது உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில், இயற்கையின் சீற்றமானது விதவிதமாக இடம்பெற்று வருவதை நாம் அனுபவ ரீதியாக காண்கின்றோம். இயற்கைக்குள் செயற்கையினைப் புகுத்தினால் இயற்கை தன் வேலையைக் காட்டிவிடும்.

இப்பிரதேசத்தில் தற்போது மோசமாக இடம்பெற்று வரும் கடலரிப்பிற்குக் காரணம் துறைமுக நிர்மாணிப்பின் போது வரையப் பட்ட வடிவமைப்பில் ஏற்பட்ட பிழைகளாக இருக்குமோ என துறைமுகங்கள் அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது. இதற்கென இத்திட்டத்தினை வடிவமைப்புச் செய்த டனிடா நிறுவனத்திடம் துறைமுகங்கள் அதிகார சபை மீளவும் வடிவமைப்புப் பற்றிய அய்வறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது.

இதுதவிர இவ் ஆய்வறிக்கையினை மேற்கொள்வதற்காக குறிப்பிட்டதொரு தொகை நிதியினை வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. நிதியமைச்சிடம் பேசி இந்நிதி யினை உடனடியாகப் பெற்றுக் கொடுக் கப்பதற்கான முயற்சிகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் களையும் அழைத்து வர முயற்சிகளை மேற்கொள்ள வுள்ளோம்.

இத்துறைமுகம் வருமானம் ஈட்டும் ஓர் துறைமுகமாக இல்லை. இந்நிலைமை யினை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம்.

அந்த வகையில் முதலீட்டாளர்களை இங்கு வரவழைப் பதுடன் துறைமுகத் தினை சிறந்த முறையில் இயங்கச் செய்ய வேண்டும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகையில் - மறைந்த பெருந்தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் ஒலுவில் பிரதேசத்தினைப் பற்றி பெரும் கனவுகளைக் கண்டிருக்கின்றார்.

இப்பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினை நிறுவவும் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கும் பல சவால்களை எதிர்கொண்டார். அவர் எந்த நோக்கத்திற்காக துறைமுகத்தினை இங்கு நிறுவ வேண்டுமென எண்ணினா ரோ அந்த நொக்கம் நிறைவேறவில்லை என்பது எல்லோராலும் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைமையினை எண்ணி நாம் மிகுந்த மனவேதனை அடைக்கின்றோம்.

தலைவர் அஷ்ரஃப் கண்ட கனவுகளுக்கு மாற்றமாகவே எல்லா விடயங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒலுவில் பிரதேசத்தில் தற்போது மிக மோசமாக பாதிப்பினை ஏற்படுத்தி வரும் கடலரிப்புப் பற்றி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு உடனடியாகத் தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

இத்துறையுடன் சம்பந்தப்பட்ட துறைமுகங்கள் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் கடற்றொழில் நீரக வள மூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரை உடனடியாக இப்பகுதிக்கு அழைத்துவர முயற்சிக்கவுள்ளேன்.

(ஒலுவில் தினகரன், ஒலுவில் விசேடம், அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்கள்)