அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றமானது சம்பூர் பிரச்சினைக்கான முழுமையான தீர்வினைப் பெற்றுத் தரும் என்பது அனைவரதும் நம்பிக்கையாக இருந்தது. குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் முக்கிய காரணங்களில் ஒன்றாக இப்பிரச்சினையையும் தமிழ் பேசும் மக்கள் அடையாளப்படுத்தியிருந்தனர்.
பல இன மத மொழிகள் சார்ந்த மக்கள் வாழும் இலங்கையில் இன முரண்பாடு ஏற்படுவதனைத் தவிர்க்க முடியாமல் போயுள்ளது. இம் முரண்பாடு குறிப்பிட்ட காலங்களில் பின் னர் போராக பரிணமித்தது. 2005ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசில் போர் வெற்றி கொள்ளப்பட்டது. இருப்பினும் யுத்தம் விட்டுச்சென்ற விளைவுகள் இன்னும் தொடர்கின்றன.
இவ் விளைவுகளில் முக்கியமானதாக அடையாளங் காணப்படுவது மீள் குடி யேற்றப் பிரச்சினையாகும். யுத்த நிறை வினைத் தொடர்ந்து சமாதானத்தை கட்டியெழுப்பல் முன்னெடுக்கப்பட வில்லை. மீள்குடியேற்றம் இலங்கை யில் முழுமைப்படுத்தப்படாத தன்மை தொடர்ந்தது. போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் பிரதேச மக்கள் எட்டு வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இடைத்தங்கல் முகாமிலே வாழ்ந்து வந்தனர். குறிப் பாக இலங்கை அரசுக்கும் சம்பூர் பிரதேச மக்களுக்கும் மீள் குடியேற்றக் கொள்கை தொடர்பாக காணப்பட்ட வேறு பட்ட கருத்தாடல்கள் மீள் குடியேற்றத் தினை சாத்திய மற்ற தாக்கியது.
அதாவது பொருளாதார வலயம், பாதுகாப்பு வலயம் என சம்பூர் பிரதேசத் தில் மக்களை மீள்குடியேற்ற முடியாத நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. எனினும் தங்களுக்கான சொந்த இடங்கள் தான் தமக்கு வேண்டும் என்பதில் பெரும்பான் மையான மக்கள் உறுதியாக இருந்தமை யினால் முன்னைய அரசால் தீர்வுபெற முடியாத பிரச்சினையாக இது அமைந்தது.
அதாவது யுத்தம் இடம்பெற்ற காலங் களில் தமது பாதுகாப்பின் நிமித்தம் தமது சொந்த இடங்களை விட்டு உள்நாட்டிற் குள்ளே சம்பூர் பிரதேச மக்கள் இடம் பெயர்ந்தனர். இதனைத் தொடர்ந்து இடைத்தங்கல் முகாம்களிலேயேபல இடர்களுக்கு மத்தியில் தமது வாழ்நாளை மக்கள் நகர்த்தினர். இவ் வகையில் வாழ்ந்த மக்கள் போரின் நிறைவினைத் தொடர்ந்து தமக்குச் சொந்தமான பிரதே சங்களுக்கு செல்லலாம் என்ற கனவில் இருந்தனர். இருப்பினும் இவர்களின் சொந்த பிரதேசங்களை அரச உயர் பாதுகாப்பு வலையம் மற்றும் பொருளா தார வலயம் என மாற்ற முயன்றமை யால் இம் மக்களின் கனவுகள் கலைந்தன.
சம்பூர் பிரதேச மக்களை வேறு இடங் களில் மீள்குடியேற்றம் செய்ய முன்னைய அரசு முயன்றது. இவர்களுக்கான நிலங் களை வேறு பகுதியில் ஒதுக்கித் தர எத்தனித்தது. இருப்பினும் இம் முயற் சிக்கு ஒரு சில மக்கள் மாத்திரமே ஒத்துழைத்தனர். இதனால் இந்நட வடிக்கை முழுமை பெறவில்லை. இதன் காரணமாக பல வருடங்களுக்கு மேலாக இம்மக்கள் இடைத்தங்கல் முகாமிலே எவ்வித உதவியும் கிடைக்கப் பெறாமல் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க் கையை நகர்த்தினர். இதனால் இம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்ச்சியாக கேள்விக்கிடமாக்கப்பட்டது.
எனினும் அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றமானது இப் பிரச்சினைக் கான முழுமையான தீர்வினைப் பெற்றுத் தரும் என்பது அனைவர் சார் நம்பிக்கை யாக இருந்தது. குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் முக்கிய காரணங்களில் ஒன்றாக இப் பிரச்சினையையும் தமிழ் பேசும் மக்கள் அடையாளப்படுத்தி யிருந்தனர். இதன் நிமித்தம் புதிய அரசு இம் மக்களின் மீள்குடியேற்றத்தில் மிகுதியான கவனயீர்ப்பைப் பெற்றி ருந்தது.
அதன் அடிப்படையில் அதற்கான வேலைப்பாடுகள் சிறந்த முன்னேற்றத்தி னையும் எய்தின. குறிப்பாக சம்பூர் பிரதேச மக்கள் அவர்களுக்கான சொந்த இடங்களிலே மீளச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதில் மிக முக்கிய கட்டமாக கடந்த 22ம் திகதி திருகோண மலை சம்பூரில் மீள் குடியேற்றப்பட்ட மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமிழ் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா. சம்பந்தன் அமைச்சர்களான சுவாமிநாதன், ரவூப் ஹக்கீம் என்போர் நேரில் சென்று சந்தித்ததோடு சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்கி வைக்கும் நடவடிக்கைகளும் விரைவு படுத்தப்பட்டுள்ளது.
இவ் வகையில் எட்டு வருடங்களுக்கு மேலாக இடைத்தங்கல் முகாமிலே வசித்து வந்த மக்களின் இன்னல்களுக் கான தீர்வு இன்றைய நல்லாட்சியில் சாத்தியமாகியுள்ளது.